Bus Van Collision In Kumarapalayam: செங்கத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் வேன் குமாரபாளையத்தில் பயங்கர விபத்து

நாமக்கல்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த (Bus Van Collision In Kumarapalayam) ஐயப்ப பக்தர்கள் சுமார் 40 பேர் கொண்ட குழுவினர் சபரிமலைக்கு பயணம் செய்வதற்காக நேற்று (டிசம்பர் 14) சிறப்பு பூஜைகளை செய்தனர். அதன்பின்னர் இருமுடி கட்டி இரவு 1.30 மணிக்கு சபரிமலை செல்வதற்காக தயார் செய்திருந்த தனியார் பேருந்தில் அனைவரும் புறப்பட்டனர்.

அதன்படி செங்கத்தில் இருந்து புறப்பட்ட ஐயப்ப பக்தர்களின் பேருந்து இன்று அதிகாலை (டிசம்பர் 15) சுமார் 5 மணியளவில் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது சர்வீஸ் சலை தேவி தியேட்டர் அருகாமையில் பேருந்து சென்றபோது எதிரே வேகமாக வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக பேருந்து மீது நேருக்கு நேராக பயங்கரமாக மோதியது.

மோதிய வேகம் காரணமாக பேருந்து இழுத்து செல்லப்பட்டு சாலையோரத்தில் உள்ள மரங்களில் வேகமாக மோதி, அருகாமையில் உள்ள ஒரு கட்டடத்தின் மீது மோதி நின்றது. இதனால் பேருந்தில் இருந்து ஐயப்ப பக்தர்கள் பயங்கரமாக கூச்சலிட்டனர்.
இந்த விபத்தில் பேருந்தில் முன்பக்கம் பயணம் செய்த சுமார் 15 ஐயப்ப பக்தர்களுக்கு காயம் ஏற்பட்டது. அதே நேரம் லாரியை ஓட்டி வந்த டிரைவருக்கும் படுகாயம் ஏற்பட்டது.

இந்த விபத்தை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக அங்ஙகு திரண்டி பேருந்தில் சிக்கிக்கொண்ட ஐயப்ப பக்தர்களை பத்திரமாக மீட்டனர். இதன் பின்னர் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காயமடைந்த பக்தர்கள் அனைவரும் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

காயமடைந்த பக்தர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இந்த விபத்து தொடர்பாக அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் அனைவரும் தப்பினர். இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் மீண்டும் சபரிமலைக்கு செல்வதற்கு தயாராகினர்.

இந்த விபத்தால் ஐயப்ப பக்தர்கள் சென்ற பேருந்து கடுமையாக சேதமடைந்து பழுதாகி நின்றது. மீண்டும் அவர்கள் அந்த பேருந்தில் சபரிமலை செல்வதற்கு சாத்தியக்கூறு இல்லை என்பதால் வேறு வாகனத்தை ஏற்பாடு செய்து சபரிமலை செல்வதற்கு திட்டமிட்டிருந்தனர்.

அவர்களுக்கு குமாரபாளையம் ஐயப்ப சேவா சங்கம் சார்பாக காயமடைந்த பக்தர்களுக்கு உதவ முன்வந்தனர். அதன்படி அனைவரையும் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்று உணவுகள் வழங்கினர். பின்னர் அச்சங்கம் சார்பாக மாற்று வாகனம் தயார் செய்து கொடுக்கப்பட்டு இன்று இரவு மீண்டும் சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல உள்ளதாக தகவல் கூறினர். சபரிமலைக்கு சென்ற ஐயப்ப பக்தர்களின் பேருந்து விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முந்தைய செய்திகளை படிக்க:Aiims Hospital Server Recovery: எய்ம்ஸ் மருத்துவமனை சர்வர் நிலைமை என்னாச்சி: மத்திய அரசு பரபரப்பு தகவல்!

முந்தைய செய்திகளை படிக்க:Shortage of medicines for Cattle : தமிழகத்தில் கால்நடைகளுக்கு மருந்து தட்டுப்பாடு நிலவி வருகிறது : எடப்பாடி பழனிசாமி