Survey To Identify School: பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டுப்பிடிக்க கணக்கெடுப்பு

சென்னை:2022-2023ம் கல்வி ஆண்டில் பள்ளிக்கு (Survey To Identify School) செல்லாத குழந்தைகளை கண்டுப்பிடிப்பதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்று விடுத்துள்ளது.

2022-2023ம் கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் பள்ளியில் இடைநின்ற மாணவர்களுடைய விவரங்களை சேகரிக்கும் என்று ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதன்படி 100 சதவீத மாணவர் சேர்க்கையை உறுதி செய்கின்ற வகையில் ஆண்டு தோறும் பள்ளிகளில் இருந்து இடைநிற்கின்ற மாணவர்களுடைய விரவங்களை சேகரித்து அவர்களை மீண்டும் பள்ளிகள் அல்லது சிறப்பு வகுப்புகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், பள்ளிகளுக்கு செல்லாமல் அல்லது இடையில் நின்றுள்ள குழந்தைகளை கண்டுப்பிடித்து அவர்ளுடைய விவரங்களை சேகரிக்க வேண்டும் எனவும், சேமித்து வைத்திருக்கும் விவரங்களின் அடிப்படையில் குழுந்தைகளுடைய வீடுகளுக்கே நேரடியாக சென்று அவர்களை மறுபடியும் பள்ளியில் சேர்க்க களப்பணி செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், டிசம்பர் 19ம் தேதி முதல் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் தன்னார்வலர்கள் உள்ளிட்டோரின் மூலமாக குழுக்கள் அமைத்து இடையில் நின்ற மாணவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி 19.12.2022 முதல் 11.01.2023 வரையில் கணக்கெடுப்பு களப்பணிகளை மேற்கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் எவ்வித முன்னறிவிப்பின்றி தொடர்ந்து 30 நாட்கள் பள்ளிக்கு வராமல் உள்ள குழந்தைகள் மற்றும் அதிகமாக விடுமுறை எடுத்துவிட்டு பள்ளியில் இருந்து இடையில் நின்ற குழந்தைகள் அனைவரும் பள்ளி செல்லாக் குழந்தைகளாக கருதப்படுவர் என கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்திகளை படிக்க:Tamilnadu Minister Changes: தமிழக அமைச்சர்களின் துறைகள் திடீர் மாற்றம்

முந்தைய செய்திகளை படிக்க:Udhayanidhi Stalin Become Sports Minsiter: மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின்