New Power Distribution Zones:புதிய மின் பகிர்மான கோட்டங்களை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மின் பகிர்மான கழகத்தில் (New Power Distribution Zones) 176 கோட்டங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் கோட்டங்களுக்கு இடையிலான மின் இணைப்புகள் சமமாக இல்லாமல் இருக்கும் காரணத்தினால் பணிகளில் சமநிலை இல்லாத நிலை இருக்கிறது.
இதற்கு உதாரணமாக தாம்பரம் கோட்டத்தில் அதிகபட்சமாக 6,79,239 மின் இணைப்புகளும், கூடலூரில் குறைந்தபட்சமாக 68,022 மின் இணைப்புகளும் இருக்கிறது. பணிகளை சமநிலைப்படுத்தும் நோக்கத்தில் நிர்வாக அமைப்பு மறுசீரமைப்பு செய்யப்படும் என்று மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி கோட்டங்களுக்கு இடையிலான மின் இணைப்புகளை சமநிலைப்படுத்துவதற்காகவும், நிர்வாக பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவும் தினமும் நடவடிக்கைகளில் வேலையை தீவிரப்படுத்துவதற்காகவும், மக்களுக்கு சீரான மின் விநியோகம் வழங்குவதை உறுதி செய்கின்ற நோக்கத்தில் பொதுமக்களின் புகார்கள் மீது உடனடியாக தீர்வு காண்பதற்காகவும், அரசு அறிவிக்கின்ற திட்டங்களை உடனடியாக செயல்படுத்துவதற்காக மறுசீரமைப்பு நடவடிக்கையாக ஏற்கனவே இருக்கின்ற 176 மின் பகிர்மான கோட்டங்களுடன், கூடுதலாக சென்னை மாவட்டத்தில் சேப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர், பல்லாவரம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை, தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணைநல்லூர், திருப்பூர் மாவட்டத்தில் ஊத்துக்குளி, வேடசந்தூர், ஜெயங்கொண்டம், சாத்தூர், கெங்கவள்ளி உள்ளிட்ட இடங்களில் 11 மின் பகிர்மான கோட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 15) தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், செந்தில்பாலாஜி மற்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் தலைவர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்திகளை படிக்க:Today Astrology: இன்றைய ராசி (15.12.2022) பலன்களை தெரிந்துகொள்வோம்

முந்தைய செய்திகளை படிக்க:Tamilnadu Comming 5 Days Rain: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம்