Admk General Assembly Case: அ.தி.மு.க., பொதுக்குழு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

டெல்லி: கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி அ.தி.மு.க., (Admk General Assembly Case ) நடத்திய பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்ததை செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வில் இரட்டை தலைமையில் இயங்கி வந்தது. அதாவது ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் செயல்பட்டு வந்தனர். இவர்கள் தலைமையில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டனர். அப்போது எடப்பாடி பழனிசாமி மட்டும் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். ஓ.பன்னீர்செல்வம் ஒரு குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டுமே பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுகளும் அப்போது பேசப்பட்டது. இதற்கிடையில் அ.தி.மு.க., ஆட்சியை இழந்து தி.மு.க., அரசு ஆட்சி அமைத்தது.

இதன் பின்னர் அ.தி.மு.க.,வில் ஒற்றை தலைமையில்தான் கட்சி இருக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இரட்டை தலைமையே இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். ஆனால் அவரது கோரிக்கையை அ.தி.மு.க., பொதுக்குழு நிராகரித்து விட்டது. அதன்படி ஒற்றை தலைமை வர வேண்டும் என்று பொதுழுக்குழு எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஓ.பன்னீர்செல்வம் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி செல்லாது என்று அறிவிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அங்கு நடைபெற்ற தீர்ப்பில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்தது சரி என்ற தீர்ப்பு வந்தது. இதனை எதிர்த்து ஓ.பி.எஸ்., சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், பொதுக்குழு விவகாரம் தொடர்பான மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி கடந்த திங்கட்கிழை இந்த வழக்கு விசாரணைக்கு வருவதாக இருந்தது. ஆனால் நேரமில்லாத காரணத்தால் வழக்கு இன்று (டிசம்பர் 15) தள்ளி வைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது. அதன்படி இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அ.தி.மு.க., தொண்டர்கள் மட்டுமின்றி நிர்வாகிகள் மத்தியிலும் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

முந்தைய செய்திகளை படிக்க: Penalty To Tamil Nadu Govt: துப்புரவு பணியாளருக்கு ஓய்வூதியம் வழங்காத தமிழக அரசுக்கு…

முந்தைய செய்திகளை படிக்க :Aiims Hospital Server Recovery: எய்ம்ஸ் மருத்துவமனை சர்வர் நிலைமை என்னாச்சி: மத்திய அரசு பரபரப்பு தகவல்!

admk general assembly case issue today superme court