kashi Tamil Sangam: காசி தமிழ் சங்கமம் விழா இன்றுடன் நிறைவு: யார், யார் பங்கேற்கிறார்கள்?

வாரணாசி: உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் (kashi Tamil Sangam) காசி தமிழ்ச் சங்கமம் சார்பாக கடந்த மாதம் நவம்பர் 17ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதனை பிரதமர் மோடி கடந்த மாதம் 19ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடந்து வருகிறது.

இதனால் தமிழகத்தில் இருந்து மாணவ, மாணவிகள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் என்று 2,500 பேர் பங்கேற்றனர். அதில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில், வாரணாசியில் நடந்து வரும் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி இன்று (டிசம்பர் 16) முடிவுக்கு வருகிறது. இந்த நிறைவு விழாவின் போது உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முன்னிலை வகிக்க உள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். அதே போன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், தர்மேந்திர பிரதான், கிஷண் ரெட்டி உள்ளிட்டோர்களும் பங்கேற்கின்றனர்.

இந்த தமிழ்ச் சங்கத்தின் மூலமாக தமிழகத்திற்கும் காசிக்கும் உள்ள நாகரிக பண்புகள் மற்றும் பல நூற்றாண்டுகளாக நடைபெறும் அறிவுப் பிணைப்புகள் மீட்பதற்காக இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் தமிழத்தில் ஏராளமான கல்லூரி மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் என்று பலரும் சிறப்பு ரயில்கள் மூலமாக காசிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் தங்கும் இடம் மற்றும் உணவுகளை இலவசமாக அளிக்கப்பட்டது. இதன் மூலம் காசியில் உள்ள கலாச்சாரங்களை தமிழர்களும், தமிழக கலாச்சாரங்களை காசியில் இருப்பவர்களும் தெரிந்து கொள்வதற்கு இந்த நிகழ்ச்சி பெரிதாக உதவியது என்று சொல்லலாம்.

மேலும், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் இருந்து சுமார் 12 விரைவு ரயில்களில் 2,592 பேர் பயணம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே தகவலை கூறியுள்ளது.

முந்தைய செய்திகளை படிக்க:A State Central Committee Meeting: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அண்ணாமலை தலைமையில் ஆலோசனை

முந்தைய செய்திகளை படிக்க:Penalty To Tamil Nadu Govt: துப்புரவு பணியாளருக்கு ஓய்வூதியம் வழங்காத தமிழக அரசுக்கு அபராதம்