Youth’s helped a disabled person: மழை நீரில் சிக்கிய மாற்றுத்திறனாளிக்கு உதவிய இளைஞர்கள்

கோவை: Parats are piling up for the youth’s who helped a disabled person trapped in rainwater in Coimbatore. கோவையில் மழைநீரில் சிக்கிய மாற்றுத்திறனாளிக்கு உதவிய இளைஞர்களுக்கு பராட்டுகள் குவிந்து வருகிறது.

மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கோவையில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் கனமழை பெய்து வருவதால், மேம்பாலங்களின் கீழ் பகுதியில் மழை வெள்ளம் தேங்கி அவ்வழியாக சென்ற வாகனங்கள் நீரில் சிக்கிக்கொண்டன.

இதனைத்தொடர்ந்து இன்றும் மாநகரின் பல்வேறு பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. கோவை காந்திபுரம், பீளமேடு, ரயில்நிலையம், உக்கடம் மற்றும் சிங்காநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து வீடு திரும்பிய மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

கோவை காந்திபுரம் பார்க்கேட் பகுதியில் சாலையில் தேங்கியிருந்த மழை நீரில் மாற்றுத்திறனாளி ஒருவர் தனது மூன்று சக்கர வாகனத்தை ஓட்ட முடியாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினார்.

அப்போது அந்த வழியே பைக்கில் வந்த இளைஞர்கள் இருவர், மூன்று சக்கர வாகனத்தை இரு புறங்களிலும் உந்தித் தள்ளி அவருக்கு உதவி செய்தனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது. இச்செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மின்நிறுத்த பகுதிகள் அறிவிப்பு
கோவை மாவட்டம், இருகூர் துணை மின்நிலைய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

எனவே காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இருகூர் துணை மின்நிலையதுக்குட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இருகூா், ஒண்டிப்புதூா், ஒட்டா்பாளையம், ராவத்தூா், பள்ளிபாளையம் (ஒரு பகுதி), சிந்தாமணிப்புதூா், கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), சின்னியம்பாளையம் (ஒரு பகுதி), வெங்கிட்டாபுரம், தொட்டிபாளையம் (ஒரு பகுதி), கோல்டுவின்ஸ் (ஒரு பகுதி) பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.