High Court : கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலைதான் செய்து கொண்டுள்ளார்: உயர்நீதிமன்றம்

சென்னை: Kallakurichi student committed suicide : கள்ளக்குறிச்சி சின்ன சேலம் அருகே மாணவி ஸ்ரீமதி தற்கொலைதான் செய்து கொண்டுள்ளார் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தமிழகம் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டார் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், இது தற்கொலை அல்ல, கொலைதான் செய்யப்பட்டுள்ளார் என்று, அவரது பெற்றோர் தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், அண்மையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவக் குழு தாக்கல் செய்த அடிப்படையில் இந்த கருத்தை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மாணவி ஸ்ரீமதி மரணத்தை தொடர்ந்து தனியார் பள்ளியின் தாளாளர் ரவிகுமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியைகள் ஹரிப்ரியா, கிருத்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு அண்மையில் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது (The High Court granted bail). இது தொடர்பான விரிவான அறிக்கை பின்னர் பிறப்பிக்கப்படும் என தெரிவித்திருந்தது.

அதன்படி ஜாமீன் நிபந்தை குறித்து உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் (In the order passed by the High Court), பள்ளியின் தாளாளர், செயலாளர், தலைமை ஆசிரியர், ஆசிரியைகள் ஆகியோர் மதுரையில் தங்கி இருக்க வேண்டும். ஆசிரியை இருவரும் 4 வாரங்களுக்கு சேலம் செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் ஆஜராகி, கையொப்பம் இட வேண்டும். 4 வாரங்களுக்கு பிறகு சிபிசிஐடி போலீசார் முன் ஆஜராகி கையொப்பம் இட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜிப்மர் மருத்துவமனை மருத்துவக் குழு அளித்துள்ள அறிக்கை (A report by the Jipmer Hospital Medical Committee) குறித்து நீதிமன்றம் தெரிவித்த கருத்து, மாணவி பாலியல் பலாத்காரமோ, கொலையோ செய்யப்பட வில்லை. அவர் தற்கொலைதான் செய்து கொண்டுள்ளார் என்பது பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. மாணவி நன்கு படிக்க வேண்டும் என்று விரும்பியதற்காக ஆசிரியர்கள் சிறைவாசம் அனுபவிப்பது துரதிஷ்டவசமானது. பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடமிருந்து அச்சுறுத்தல்கலை எதிர் கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக எந்தவித ஆதாரமும் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.