Arumugasamy Commission report: ஆறுமுக சாமி ஆணைய‌ அறிக்கை: சசிகலா, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் விசாரிக்க பரிந்துரை

சென்னை: Sasikala, ex-minister Vijayabaskar recommended for inquiry : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை அளித்தத்தைத் தொடர்ந்து, அவரது தோழி சசிகலா, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் விசாரிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சென்னையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் (Chief Minister M. K. Stalin) தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நீதிபதி ஆறுமுக சாமி ஆணையம் அளித்த அறிக்கை தொடர்பாகவும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து, வி.கே.சசிகலா, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் உள்ளிட்டோரிடம் விசாரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் (Justice Aruna Jagadeesan Commission) அறிக்கை அளித்ததுள்ளது. அதில் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 17 காவல் துறையினர், மாவட்ட ஆட்சியர் உள்பட 4 அதிகாரிகள் மீது தேவையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்க ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

இந்த இரு ஆணைய விசாரணை அறிக்கைகள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப் பட்டு அவை பரிசீலனையில் உள்ளன (Both commission inquiry reports have been sent to the concerned departments and they are under consideration). இது தொடர்பான‌ பரிந்துரைகள் மீது சட்ட ஆலோசனை பெற்றப்பட்டு, அவை தொடர்பான நடவடிக்கை எடுக்கவும், அதற்கான விவர அறிக்கையையுடன் ஆணையங்களின் அறிக்கைகளை பேரவையில் விவாதத்திற்கு வைக்கவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுக சாமி ஆணைய அறிக்கை கடந்த ஆக. 27-ஆம் தேதி தமிழக அரசிடம் வழங்கப்பட்டது (Last Aug. 27th, It was given to the Tamil Nadu government ). அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை கடந்த மே 18 ஆம் தேதி வழங்கப்பட்டது.