You Are Looking Beautiful: நீங்க ரொம்ப அழகு.. சென்னை மேயர் பிரியாவை பாராட்டிய முதியவர்

சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இன்று (டிசம்பர் 20) ராயபுரம் பகுதியில் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு பணிகளை செய்து வந்தார். அந்த சமயம் நீங்கள் (You Are Looking Beautiful) அழகா இருக்கீங்க என்று ஒரு முதியவர் பாராட்டியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்று சென்னை, ராயபுரம் சூரிய நாராயணா தெருவில் இருக்கும் பள்ளிக்கூட சமையலறையை பார்வையிட்டு அங்குள்ள ஊழியர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து பனைமர தொட்டி பகுதியில் இருக்கும் மாநகராட்சி அலுவலகத்துக்கு மேயர் பிரியா சென்றார். அங்குள்ள பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் தகுந்து நேரத்திற்கு பணிக்கு வருகிறார்களா என்ற பதிவேடுகளை பார்வையிட்டார்.

அதனை முடித்துக்கொண்டு அர்த்தன் சாலையில் இருக்கும் உருது தொடக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்ற உணவுகளை பாரிசோதனை செய்தார். அதன் பின்னர் குழந்தைகளுக்கு பரிமாறியும் விட்டார்.

இந்நிலையில், சென்னையில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அண்ணா பூங்கா மறுசீரமைப்பு பணிகளை பார்வையிட்டார். அங்கு பூங்காவிற்கு வருகை புரிந்த பொதுமக்களிடமும் குறைகளை கேட்டறிந்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஒரு முதியவர் மேயர் பிரியாவை பார்த்து நீங்கள் அழகாக இருக்கீங்கள், உங்களின் பணிகளை சிறப்பாக செய்யுங்கள் என்றார். அது மட்டுமின்றி உங்களை சுற்றி அமைச்சர்கள் இருந்தாலும் நடுவில் நீங்கள் மட்டுமே அழகாக இருக்கீங்க என்றார். இதனை கேட்ட பிரியா சிரித்தபடியே வணக்கம் என்று தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே மாண்டஸ் புயலின்போது முதலமைச்சர் ஸ்டாலின் பாதுகாப்பு வாகனம் மீது தொங்கியபடி பயணம் செய்த மேயர் பிரியாவை பலர் விமர்சனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தியை பார்க்க:Public Rally Protest: பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிப்பு: பொதுமக்கள் பேரணி

முந்தைய செய்தியை பார்க்க:Admk councillor kidnapping: கரூரில் பட்டப்பகலில் அ.தி.மு.க. கவுன்சிலர் கடத்தல்: முன்னாள் அமைச்சர் வாகனம் மீது தாக்குதல்