Public Rally Protest: பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிப்பு: பொதுமக்கள் பேரணி

சென்னை: சென்னையில் இருந்து 70 கிலோ மீட்டரும், காஞ்சிபுரத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரம் கொண்ட (Public Rally Protest) பரந்தூரில் புதியதாக 2வது விமான நிலையம் அமைப்பதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்கான நிலம் எடுக்கும் பணியில் அரசு ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் அறிந்து சில மாதங்களாகவே போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு ஏராளமான கிராமங்கள் மற்றும் விளை நிலங்களை அரசு கையகப்படுத்தி வருகிறது. இதற்கான அறிவிப்பு வெளியான நாள் முதல் தொடர்ந்து பரந்தூர் மக்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அண்மையில் கூட சுற்றுவட்டார கிராம மக்கள் விவசாயத்தை அழித்து விமான நிலையமா? என்ற கையில் பதாகைகளுடன் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், புதிய விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து ஏகனாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 16 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஆயிரக்கணக்கில் போராட்டத்தில் குதித்துள்ளனர். இவர்கள் அனைவரும் அரசுக்கு எதிரான கோஷங்களை முன்வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக கிளம்பியிருப்பதால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இதனால் மாவட்ட எஸ்.பி. தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அமைச்சர் குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கான பேச்சுவார்த்தை தலைமைச் செயலகத்தில் (டிசம்பர் 20) இன்று 3 மணிக்கு பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கிராம மக்களின் போராட்டக் குழுவினரிடம் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தியை பார்க்க:Was Jayalalitha’s Operation Right? ஜெயலலிதாவுக்கு அறுவை சிகிச்சை செய்தது சரியா? விசாரணை நீதிபதி ஆறுமுகசாமி கேள்வி

முந்தைய செய்தியை பார்க்க:Actors Celebrated argentina fifa world cup win: பாலிவுட் முதல் கோலிவுட் வரை கொண்டாடிய உலகக்கோப்பை கால்பந்து போட்டி