Wild Elephant: சிக்கமகளூர் மாவட்டம் மூடிகெரெ தாலுகா கம்பரகோடு கிராமத்தில் ஒரு ஒற்றைக் காட்டு யானை ஒன்று அந்தப் பகுதியில் இருந்த விவசாய தோட்டத்தில் உள்ள குட்டையில் குளித்த வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரல் ஆகி உள்ளது
குறிப்பாக காட்டு யானை என்றாலே உடனடியாக அதை பார்த்து ரசிப்பதும் உடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கும் முன் வருவார்கள் அதிலும் குட்டி யானை என்றால் பார்த்தால் தொட்டு கொஞ்சலாம் என அருகேயும் செல்லுவார்கள் கடந்த ஒரு மாத காலமாக சிக்கமகளூர் மாவட்டத்தில் மூடிகெரெ தாலுகாவில் நிரந்தரமாக 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வந்து சுற்றி பொதுமக்களுக்கு இடையூறு கொடுத்து தோட்டத்தில் உள்ள பயிர்களையும் அழித்துவிட்டு பின்னர் தானாக அந்தப் பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு சென்றுள்ளது அதில் ஒரு காட்டு யானை முடிகெரெ தாலுகா கமரகோடு என்னும் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்து குட்டையில் ஒரு மர குச்சியை வைத்து அதை சுற்றிக்கொண்டு உள்ளே இறங்கி சுமார் ஒரு மணி நேரம் வரை குளத்தில் குளித்து மகிழ்ச்சியாகி மீண்டும் மீண்டும் வெளியே வந்து சந்தோசத்தை வெளிப்படுத்தியதை அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீடியோ படம் பிடித்து இணையதளத்திலும் வெளியிட்டுள்ளார் இந்த வீடியோவை பார்ப்பதற்கு மிகவும் ஆச்சரியமாகவும் யானை தானாக விளையாடும் காட்சி அனைவரும் மனதையும் கவர்கின்றது



