water release from Bhavani Sagar Dam: பவானி சாகர் அணையிலிருந்து 6,772 கன அடி நீர் திறப்பு

ஈரோடு: 6,772 cubic feet of water release from Bhavani Sagar Dam: பவானிசாகர் அணையில் 102 அடியை எட்டியதால், அணைக்கு வரும் 6,772 கன அடி உபரிநீர் அப்படியே மதகுகளில் திறந்துவிடப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்த கன மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை நீர்மட்டம் இன்று 102 அடியை எட்டியது.

தமிழ்நாடு அரசின் பொதுப்பணி அணைகளின் விதிதொகுப்புபடி ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 102 அடிக்கு மேல் வெள்ளநீரை தேக்கி வைக்க இயலாது என்பதால் அணைக்கு வரும் 6 ஆயிரத்து 772 கனஅடி உபரிநீர் அப்படியே ற்று மதகில் திறந்துவிடப்பட்டது.வருவாய் மற்றும் காவல்துறை சார்பில் ஆற்றில் துவைக்கவே, குளிக்கவோ கூடாது என்றும் தாழ்வான பகுதியில் இருப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஒலி பெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது.

பவானி ஆற்றில் திறந்துவிடப்படும் வெள்ளநீர் பவானிசாகர், சத்தியமங்கலம், பெரிய கொடிவேரி, வழியாக பவானிகூடுதுறை சென்றடைந்து காவிரி ஆற்றில் கலப்பதால் டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 1955ஆம் ஆண்டு பவானிசாகர் அணை கட்டப்பட்ட காலத்தில் இருந்து 21ஆவது முறையாக அணை 102 அடியை எட்டியுள்ளது. இதனால் கீழ்பவானி பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக இடியுடன் கூடிய கனமழை மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு விவரம்:

ஈரோடு – 48.0 மி.மீ ,

பெருந்துறை – 6.0 மி.மீ ,

கோபிசெட்டிபாளையம் – 2.0 மி.மீ ,

தாளவாடி – 11.0 மி.மீ ,

சத்தியமங்கலம் – 6.0 மி.மீ ,

பவானிசாகர் – 4.8 மி.மீ ,

நம்பியூர் – 48.0 மி.மீ ,

சென்னிமலை – 17.0 மி.மீ ,

மொடக்குறிச்சி – 28.0 மி‌.மீ ,

கவுந்தப்பாடி – 8.0 மி.மீ ,

எலந்தகுட்டைமேடு – 19.6 மி.மீ ,

அம்மாபேட்டை – 1.2 மி.மீ ,

கொடிவேரி – 4.2 மி.மீ ,

குண்டேரிப்பள்ளம் – 22.2 மி.மீ ,

வரட்டுப்பள்ளம் – 4‌2 மி.மீ ,

மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு – 222.2 மி.மீ ,

மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு – 13.07 மி.மீ மழை பதிவானது.

தெரிந்துகொள்வோம்:
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக வரும் பவானி ஆற்றுடன் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் மோயாறு கலக்கும் இடத்தில் கீழ் பவானி திட்டம் மூலம் அணை கட்டப்பட்டுள்ளது. இதனால் உண்டான நீர்தேக்கத்திற்கு பவானி சாகர் நீர்தேக்கம் என்று பெயர். நாடு விடுதலை அடைந்தபிறகு உருவான இத்திட்டம் 1956 இல் நிறைவடைந்தது. இந்த அணை பவானிசாகர் அணை என்றே அழைக்கப்படுகிறது.

இவ்வணை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் என்ற கிராமத்திற்கு அருகில் கட்டப்பட்டுள்ளது. இது ஒரு மண் அணையாகும். இதன் உயரம் 105 அடி, இதன் கொள்ளளவு 33 கோடி கனஅடியாகும். இதன் நீர்ப்பிடிப்பு பகுதி 1621.5 சதுர மைல் ஆகும். நீர்தேக்கத்தின் பரப்பளவு 30 சதுர மைல்களாகும். அணை உள்ள இடத்தில் உள்ள நகர் அணையின் பெயராலயே பவானிசாகர் என அழைக்கப்படுகிறது, இது ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வணையிலிருந்து செல்லும் கீழ் பவானி திட்ட கால்வாய் ஈரோடு மாவட்டத்தை வளப்படுத்துகிறது.