Congress protest over inflation : மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம்

Image Credit: Twitter.

தில்லி: Nationwide protest today on behalf of Congress: வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கத்தைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம் நடைபெற உள்ளது.

பாஜக ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் (Unemployment, inflation) உள்ளிட்டவை உயர்ந்துள்ளதாக கூறி காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக மக்களவை, மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சி குரல் எழுப்பி, அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனையடுத்து 20 க்கும் அதிகமான காங்கிரஸ் உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு அவையிலிருந்து வெளியேற்ற பட்டனர்.

இதனையடுத்து வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் உள்ளிட்டைகளை கண்டித்து, மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை (ஆக. 5) தில்லி உள்பட நாடு தழுவிய அளவில் போராட்டத்தில் (Nationwide protest) ஈடுபடப்போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. அதன்படி இன்று காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் ஈடுபட உள்ளது. இதனையடுத்து தில்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தில்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் உள்பட பல பகுதிகளில் இரும்பு தடுப்புச்சுவர் அமைத்து போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜந்தர் மந்தரை தவிர புதுதில்லி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது (Prohibitory order 144 has been issued across New Delhi).

வெள்ளிக்கிழமை காலை முதலே காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தையொட்டி அக்கட்சியில் அலுவலகத்தில் நிர்வாகிகள், தொண்டர் திரளாக கூடி வருகின்றனர். 144 தடை உத்தரவு உள்ளதால், அதனை யாரும் மீறக்கூடாது என்ற அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.சி.வேணுகோபால் (KC Venugopal) அக்கட்சியின் தொண்டர்களிடம் வேணுகோபால் எச்சரித்தார்.

காங்கிரஸ் கட்சியின் போராட்டத்திற்கு தில்லி போலீசார் அனுமதி வழங்காமல் உள்ள நிலையிலும், காங்கிரஸார் இந்த போராட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். போராட்டத்திலோ, பேரணியிலோ காங்கிரஸ் கட்சியினர் ஈடுபடக்கூடாது என போலீசார் எச்சரித்துள்ளனர் (The police have warned). இதனிடையே போராட்டம் மற்றும் பேரணியில் ராகுல்காந்தி கலந்து கொள்ள உள்ளார்.

முன்னதாக செய்தியாளர்களிடம்கருப்பு பட்டை அணிந்து ராகுல்காந்தி அளித்த பேட்டி: இந்தியாவில் ஜனநாயகம் இல்லாத சூழல் நிலவுவதாகவும், ஜனநாயகம் (Democracy) செத்துக்கொண்டிருப்பதாக தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அனுமதிக்கப்படுவதில்லை. எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படுகிறது. இந்தியாவில் ஜனநாயகம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது; ஜனநாயகம் செத்து மடிந்து கொண்டிருக்கிறது. ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன் பல்வேறு கல்களால் கட்டமைக்கப்பட்ட இந்தியா, உங்கள் கண் முன்னே அடித்து நொறுக்கப்படுகிறது. சர்வாதிகாரமான இந்த ஆட்சிக்கு எதிராக கேள்வி கேட்பவர்களை காவல்துறையைக் தாக்கி, கைது செய்து சிறையில் அடைக்கின்றனர்.

இந்தியாவில் இருக்க கூடிய ஒரு சில‌ பணக்காரர்களுக்காக (For some rich people)மட்டும் இந்த ஆட்சி நடைபெறுகிறது. சுதந்திரமான பல்வேறு அமைப்புகளும் மத்திய அரசு, ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடுகிறது, அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்திருக்கிறது. மக்களின் பிரச்னைகளான இதுகுறித்து பேசக்கூடாது என மத்திய அரசு கூறுகிறது. இதனை கண்டித்து போராட்டம் நடத்த அனுமதி கேட்டால் அனும் மறுக்கப்படுகிறது என்றார்.