Palani Murugan Temple : பழனி முருகன் கோவில் ரோப் கார் சேவை இன்று முதல் சோதனை ஓட்டம்

பழனி: Palani Murugan Temple rope car service starts trial run today : ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த பழனி முருகன் கோவில் ரோப் காரின் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதால், ரோப் கார் சேவையின் சோதனை ஓட்டம் இன்று முதல் நடைபெறுகிறது. விரைவில் ரோப் கார் சேவை பக்தர்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட உள்ளது.

ஆறுபடை வீடுகளில் ஒன்றான முருகன் கோவில்களில் ஒன்று பழனி முருகன் கோவில் (Palani Murugan Temple), முருகனது சிறப்புடைய கோவில்களில் ஒன்றாகும். இது தமிழ்நாட்டில் உள்ள முக்கியக் கோவில்களில் ஒன்றாக உள்ளது. இங்குள்ள முருகனது சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. பழநி கோயிலிருந்து தரைமட்டத்தில் இருந்து 450 அடி உயரத்தில் உள்ளது.

தமிழ்நாட்டில் அதிக அளவில் பக்தர்கள் வரும் கோவிலாக இது உள்ளதால், 690 படிகளைக் கொண்ட இந்த மலைப் பாதையில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மற்றும் குழந்தைகள் (Disabled, Elderly and Children) மலைக்கோயிலுக்கு சென்று முருகனை தரிசனம் செய்ய முடியாமல் தவித்தனர். இவர்களுக்காக, மலை அடிவாரத்தில் இருந்துகோவிலுக்கு செல்ல 1966 ஆம் ஆண்டு முதல் வின்ச் (மின் இழுவை ரயில்), 1981 ஆம் ஆண்டு முதல் 2 வது வின்ச், 1988 ஆம் ஆண்டு முதல் 3 வது வின்ச் சேவைகள் தொடங்கப்பட்டன. இதன் மூலம் மலையில் உள்ள கோவிலுக்கு ஏற முடியாவதர்கள் கோவிலுக்கு செல்ல வசதியாக பழனி மலையின் அடிவாரத்திலிருந்து உச்சி பகுதியிலுள்ள முருகன் கோவிலுக்கு செல்ல மின் இழுவை ரயில்கள் பயன்பட்டன.

பழநி மலைக்கோயிலுக்கு பக்தர்களின் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளதால் நெரிசலைத் தவிர்க்க ரோப்கார் சேவையை கோவில் நிர்வாகம் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்து, இழுவை ஊர்திகளில் கூட்டம் அதிகரிக்கும் போது ரோப் கார் சேவையில் பயணம் செய்து வந்தனர். ரோப் கார் சேவை மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் செய்யப்படுவது வழக்கம் (Maintenance work is done regularly). ஆனால் கடந்த ஒரு மாதமாக பராமரிப்பு பணிகள் மேற்கொண்டதால், இன்று முதல் ரோப் கார் சேவையின் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. சோதனை ஓட்டத்திற்கு பிறகு இரண்டொரு நாளில் ரோப் கார் சேவை பக்தர்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட உள்ளது.

பழனி கோவில் பற்றி:

கைலாசத்தில் நாரதர் மிக அரிதாகக் கிடைக்கும் ஞானப்பழத்தை (Wisdom fruit) பரமசிவனுக்கு படைப்பதற்காகக் கொண்டு வந்தார். அப்பொழுது அருகிலிருந்த உமையாள் அந்தப் பழத்தை தனது குமாரர்களான குமரனுக்கும், விநாயகனுக்கும் பகிர்ந்து கொடுக்க விரும்பினாள். ஆனால் பரமசிவனோ பழத்தைப் பகிர்ந்தால் அதன் தனித்தன்மை போய்விடும் எனக்கூறி தனது மைந்தர்கள் இருவருக்கும் ஒரு போட்டியை அறிவித்தார்.

அதில் உலகத்தை யார் முதலில் சுற்றிவருகிறார்களோ அவர்களுக்கு அந்த ஞானப்பழத்தைப் பரிசாக அறிவித்தார். குமரனோ தனது மயில் வாகனத்தில் ஏறி உலகத்தைச் சுற்றி வந்தார். விநாயகனோ தனது பெற்றோரை உலகமாகக் கருதி அவர்களைச் சுற்றிவந்து ஞானப்பழத்தை வென்றார். இதனால் ஏமாற்றமடைந்த குமரன் அனைத்தையும் துறந்து பழனி மலையில் (Palani Hill)குடியேறினார். அன்றிலிருந்து அவரது நின்ற இடம் ‘பழம் நீ’ என்று அழைக்கப்பட்டது. அது பின்னர் மாறி பழனி என்றாகியது.

அதேபோல பழனிமலை அங்கே வருவதற்கு உதவியவர் இடும்பன் (Itumban). அவர் பெரிய தராசின் மூலம் பழனிமலையையும் இடும்பமலையையும் தூக்கிக்கொண்டு வந்து வைத்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. புராணங்களில் இப்படியான பெயர்க் காரணங்கள் வழங்கப்பட்டாலும் பழனம் என்ற பழந்தமிழ்ச் சொல்லின் அடிப்படையில் உருவான பெயரே பழனி. பழனம் என்ற சொல் விளைச்சலைத் தருகின்ற நிலத்தைக் குறிக்கும். அப்படிப்பட்ட நல்ல விளைச்சல் நிலம் நிறைந்த பகுதி என்பதால் பழனி என்ற பெயர் உருவானது.