Was Jayalalitha’s Operation Right? ஜெயலலிதாவுக்கு அறுவை சிகிச்சை செய்தது சரியா? விசாரணை நீதிபதி ஆறுமுகசாமி கேள்வி

முதலமைச்சராக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவுக்கு (Was Jayalalitha’s Operation Right) அறுவை சிகிச்சை செய்தது சரியா என்றும், அவரது மரணம் பற்றி விசாரணை நடத்தி வந்த நீதிபதி ஆறுமுகசாமி பரபரப்பான கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

கோவை வக்கீல் சங்கம் சார்பில் வக்கீல் சுந்தரவடிவேலு தந்தையான மறைந்த மூத்த வக்கீல் நடனசபாபதி படத்திறப்பு விழாவானது நேற்று வக்கீல் சங்க அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை மேற்கொண்ட ஒரு நபர் கமிஷன் நீதிபதி ஆறுமுகசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது: மறைந்த மூத்த வக்கீல் நடனசபாபதி அரசு வக்கீலாக மிகவும் சிறப்பான முறையில் பணியாற்றிய காலக்கட்டத்தில் கூட்டுறவு சங்க வழக்குகளில் திறமையான வாதங்களை முன்வைத்தார். நீதிமன்றங்களில் எந்த ஒரு வழக்கிலும் விசாரணை மேற்கொண்டாலும் இளம் வக்கீல்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்பது ஒரு கடமையும் ஆகும்.

மேலும் அவர் ஜெயலலிதாவுக்கு அறுவை சிகிச்சை செய்தது சரியா? என்று ஆறுமுகசாமியிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பேசியதாவது: ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீங்கள் சொன்ன அறிக்கை முடிவினை எங்கு பரிசோதனை செய்து பார்ப்பது என்று சில வக்கீல்கள் தன்னிடம் கேட்டனர். ஜெயலலிதாவின் வயது 68, அவரின் உயரம் 5 அடி, 100 கிலோ எடை இருந்துள்ளது.

அப்போது அவரை மருத்துவமனையில் சேர்க்கும் போது சர்க்கரை அளவு 228 மில்லி கிராம், ரத்த அழுத்தம் 160, கிரியாட்டினின், 0.82 ஆக இருந்திருக்கிறது. ஜெயலலிதாவின் உடல் எடை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு இப்படி இருக்கும் நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யலாமா என்பது மட்டும்தான் கேள்வி.

இதே போன்று ஒருவர் உயிருடன் இருப்பதை போன்று ஒரு மருத்துவரை வைத்து உலகில் உள்ள எந்த ஒரு மருத்துவமனையில் வேண்டும் என்றாலும் கேட்டு பாருங்கள். நீங்கள் இந்த ஆய்வின் அறிக்கையை பரிசோதனை செய்தும் பார்க்கலாம் என்று தன்னிடம் கேள்வி எழுப்பிய வக்கீல்களிடம் கூறியுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். தற்போது மீண்டும் இவரது பேட்டி சமூக வலைதளங்களில் அரசியல் கட்சிகளால் பகிரப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தியை பார்க்க:Farmers Protest Again In Delhi: டெல்லியில் 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஒரு லட்சம் விவசாயிகள் போராட்டம்

முந்தைய செய்தியை பார்க்க:Appointment order for 18 Deputy Collectors: துணை ஆட்சியர்களாக தேர்வு செய்யப்பட்ட 18 பேருக்கு பணிநியமன ஆணை