Chennai To Goa Plane Charge Hike: சென்னை, கோவா விமான கட்டணம் 4 மடங்கு திடீர் உயர்வு

சென்னை: கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு (Chennai To Goa Plane Charge Hike) கொண்டாட்டங்கள் காரணமாக இந்தியா முழுவதும் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் விமான கட்டணங்கள் கணிசமான அளவில் உயர்ந்துள்ளது.

மேலும் புத்தாண்டு ஞாயிற்றுக்கிழமை பிறப்பதால் அது விடுமுறை கொண்டாட்டமாகவும் மாறி விட்டது. இதனால் நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் ஏராளமானோர் விமானங்களில் செல்வதற்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இருந்தே முன்பதிவு செய்து வருகின்றனர்.

அது மட்டுமின்றி இந்திய சுற்றுலா தலங்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நாட்களில் கோவாவில் தான் அதிகளவு பயணிகள் கூடுவது வழக்கம். அதே போன்று இந்த ஆண்டும் கோவாவுக்கு செல்வதற்கு விமானங்களில் முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துவிட்டது.

மேலும் டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை உட்பட நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்தும் கோவாவிற்கு செல்வதற்கான விமான கட்டணங்கள் 4 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

அது போன்று கோவாவில் இருந்து ஜனவரி முதல் வாரத்தில் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்பட்டு வரும் விமானங்களின் கட்டணமும் 4 மடங்கு உயர்ந்திருக்கிறது. சென்னையில் இருந்து கோவாவிற்கு செல்வதற்கு வழக்கமாக ரூ.4,400 கட்டணம் வசூல் செய்ப்படும். ஆனால் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக உயர்ந்திருப்பதால் தற்போது ரூ.13 ஆயிரம் முதல் 16 ஆயிரம் வரையில் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் டிசம்பர் 23, 24ம் தேதிகளில் அனைத்து விசான இருக்கைகளும் நிரம்பி விட்டது. அது போன்று ஜனவரி 1, 2ம் தேதிகளில் விமானங்களில் டிக்கெட் இல்லை என்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. கோவாவில் இருந்து சென்னை தவிர்த்து டெல்லி, மும்பை, பெங்களூரு நகரங்களுக்கும் முன்பதிவுக்கான இருக்கைகள் நிரம்பிவிட்டது என்றே சொல்லலாம்.
மேலும், தமிழகத்தில் பிற மாவட்டங்களான கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்களில் இருந்து கோவா செல்லும் விமானங்களிலும் டிக்கெட் கட்டணம் உயரலாம் என கூறப்படுகிறது.

முந்தைய செய்தியை பார்க்க:Was Jayalalitha’s Operation Right? ஜெயலலிதாவுக்கு அறுவை சிகிச்சை செய்தது சரியா? விசாரணை நீதிபதி ஆறுமுகசாமி கேள்வி

முந்தைய செய்தியை பார்க்க:Appointment order for 18 Deputy Collectors: துணை ஆட்சியர்களாக தேர்வு செய்யப்பட்ட 18 பேருக்கு பணிநியமன ஆணை