Robbery Of Rs 20 Lakh By Pretending To Be An Nia: என்.ஐ.ஏ. அதிகாரியாக நடித்து ரூ.20 லட்சம் கொள்ளை வழக்கில் 6 பேர் சரண்

சென்னை: என்.ஐ.ஏ. அதிகாரி (Robbery Of Rs 20 Lakh By Pretending To Be An Nia) என்று கூறி 20 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தற்போது 6 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
சென்னை, பர்மா பஜாரில் ஜமால் என்ற நபர் செல்போன் கடை நடதத் வருகிறார். கடந்த டிசம்பர் 13ம் தேதி அவரது வீட்டிற்கு சென்ற 6 பேர் கொண்ட கும்பல் தங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் என கூறியுள்ளது.

அது மட்டுமின்றி கோவை குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி விசாரணை நடத்துவதாக சொல்லி வீட்டில் இருந்து 20 லட்சம் ரூபாயை எடுத்துச் சென்றுள்ளனர். இது பற்றி போலீசார் விசாரணை செய்து வந்தனர். அப்போது ஜமாலின் வீட்டிலிருந்து ரூ.20 லட்ச ரூபாயை எடுத்துச் சென்றது போலியான என்.ஐ.ஏ. அதிகாரிகள் என கண்டுப்பிடித்தனர். அதன்படி கொள்ளையில் ஈடுபட்டது, ராயபுரத்தை சேர்ந்த வேலு மற்றும் அவரது கூட்டாளிகள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

அதன்படி தனிப்படை அமைத்த போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த நிலையில் கொள்ளையர்கள் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்திருப்பது கண்டறியப்பட்டது. இந்த வழக்கின் முக்கிய திருப்பமாக ரூ.20 லட்சம் கொள்ளையடித்ததாக புகார் கூறப்பட்ட நிலையில் 2 கோடி ரூபாய் கொள்ளையடித்தாக கொள்ளையர்கள் வாக்குமூலம் கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெறும் 20 லட்சம் மட்டும்தான் கொள்ளை போனதாக போலீசார் நடத்திய விசாரணையில் தற்போது கொள்ளையர்களே 2 கோடி ரூபாய் என்று சொல்லியிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முந்தைய செய்தியை பார்க்க:Was Jayalalitha’s Operation Right? ஜெயலலிதாவுக்கு அறுவை சிகிச்சை செய்தது சரியா? விசாரணை நீதிபதி ஆறுமுகசாமி கேள்வி

முந்தைய செய்தியை பார்க்க:Tamil Nadu State Human Rights Commission: தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு 2 உறுப்பினர்கள் நியமனம்