PM Modi’s visit to Mangalore பிரதமர் நரேந்திர மோடி வருகையின் பின்னணியில் மங்களூரில் அவசர கதியில் சாலை சீரமைப்பு பணி: பொதுமக்கள் கிண்டல்

Road repair work : பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 2 ஆம் தேதி மங்களூரு வருவதையொட்டி மங்களூரில் சாலை சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் அவசர கதியில் நடைபெற்று வருகிறது.

மங்களூரு: Urgent road repair work in Mangalore on the backdrop of PM Modi’s visit: பிரதமர் மோடி மங்களூரு வருகை: பிரதமர் மோடி செப்டம்பர் 2 ஆம் தேதி மங்களூருக்கு வரவுள்ள பின்னணியில் மாநகரில் அவசர கதியில் சாலை சீரமைப்பு பணி நடக்கிறது. நகரில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகள் இன்று சம படுத்தப்பட்டுள்ளன. மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கூளூர் சாலை வரை சாலை சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழித்தடத்தின் சில பகுதிகளில் இன்று சாலை விரிவாக்கப் பணிகளும் செய்யப்பட்டுள்ளன (Road widening works have been done). ஒருபுறம் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. ஆனால், இதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், மிக மோசமான அளவில் சாலை சீரமைப்பு பணிகள் அவசரகதியில் விரைந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கேரளாவில் இருந்து விமானம் அல்லது ஹெலிகாப்டர் மூலம் மங்களூருக்கு வர வாய்ப்புள்ளது.

எந்த சாலை வழியாக‌ பிரதமர் நரேந்திர மோடி செல்ல உள்ளார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை (It is yet to be decided which road Prime Minister Narendra Modi will take). ஆனால், மாநகரில் தார்சாலை போடும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன‌. கடந்த ஓராண்டாக இப்பகுதியில் சாலை முற்றிலும் பழுதடைந்துள்ளது. இதனால், சேதமடைந்த சாலைகளை, மண் போட்டும், ஜல்லிப் போட்டும், தொழிலாளர்கள் சீர் செய்து வருகின்றனர்.

ஆனால், இது போன்று குப்பையை கொட்டும் வகையில் சாலையை தார் போட்டு மூடுவது தொடர்பாக‌ பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்த பள்ளங்களால் ஏற்படும் விபத்துகளால் ஏற்கனவே பலர் உயிரிழந்துள்ளனர் (Many people have already died due to accidents caused by these potholes). நாள் தோறும் சாலை பள்ளங்களால் ஏற்படும் விபத்துகளால் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் அப்போது செய்யாத மராமத்து பணிகள் தற்போது நடைபெறுகிறது. மங்களூரில் உள்ள சாலை போட வேண்டும் என்றால், பிரதமர் வர வேண்டும் என்பதனை மக்கள் இப்போது புரிந்து கொண்டுள்ளனர். தார் சாலைகள் லேசாக போடுவதால், பிரதமர் வந்து சென்ற பிறகு, மங்களூரில் போடப்பட்ட சாலைகள் மீண்டும், குண்டு குழியுமாக ஆக உள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர‌ மோடி அடிக்கடி மங்களுருக்கு வந்து செல்ல முடியுமா என்று பொதுமக்கள் கிண்டல் செய்கின்றனர்.