TTV Dinakaran has been hospitalized: டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதி

தஞ்சை: AMMK general secretary TTV Dinakaran has been hospitalized due to ill health. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தஞ்சையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அங்கு முகாமிட்டுள்ளார். அவர் நேற்றிரவு உணவு உட்கொண்டதில் ஒவ்வாமை ஏற்பட்டதன் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, இன்று அதிகாலை தஞ்சையில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாலை வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரத்தில் தகவல் வெளியாகியிருந்தது.

இதனைத்தொடர்ந்து, டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சிறிய உடல்நலக் குறைவு (உணவு ஒவ்வாமை) காரணமாக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

எனவே, கழக உடன்பிறப்புகள் யாரும் கவலைப்பட வேண்டாம். நேரில் பார்க்க வருவதையும் தவிர்க்க வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன். என அவர் பதிவிட்டுள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் பரவியதையடுத்து, அமமுக தொண்டர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.