Australia Team Announcement ; இந்திய தொடர், டி 20 உலகக் கோப்பைக்கான‌ ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு

சிட்னி : Australia Team Announcement for India Series, T20 World Cup : அக். 16 ஆம் தேதி டி 20 உலகக் கோப்பை போட்டி தொடங்கி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் போட்டிக்கு முன்னதாக இந்தியாவுடனான டி 20 தொடரிலும் இந்த அணியே மோத இருக்கிற எனினும் , இந்திய தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் வார்னருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக‌, கேமரூன் கிரீன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

உலகக் கோப்பை போட்டியில் கிரீனுக்குப் பதிலாக மீண்டும் டேவிட் வார்னர் (David Warner) இணைந்து விளையாட உள்ளார் . உலகப் கோப்பை அணியைப் பொருத்தவரை டீம் டேவிடிற்கு முதல் முறையாக சர்வதேச டி 20 அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அக்டோபரில் இந்தியாவை அடுத்து உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக , மேற்கிந்தியத் தீவுகள் , இங்கிலாந்து (West Indies, England) நாடுகளுடனான போட்டிகளில் அந்த அணிகளுடனும் ஆஸ்திரேலியா விளையாடுகிறது.

இந்திய அணியுடனும், டி 20 போட்டிகளில் விளையாட உள்ள ஆஸ்திரேலியா அணியின் வீரர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது (The names of the players of the Australian team have been announced). அதன்படி ஆரோன் ஃபிஞ்ச் ( கேப்டன்) , பேட் கம்மின்ஸ் , ஆஷ்டன் அகர் , டிம் டேவிட் , ஜோஷ் ஹேஸில்வுட் , ஜோஷ் இங்லிஸ் , மிட்செல்மார்ஷ் , கிளென் மேக்ஸ்வெல் , கேன் ரிச் சர்ட்சன் , ஸ்டீவ் ஸ்மித் மிட்செல் , ஸ்டார்க் , மார்க்ஸ் ஸ்டாயினிஸ் , மேத்யு வேட், டேவிட் வார்னர் (டி 20 உலகக் கோப்பை போட்டிக்கு மட்டும்), கோரூள் கிரின் (இந்திய தொடருக்கு மட்டும்), ஆடம் சாம்பா ஆகியோர் ஆஸ்திரேலிய அணியில் விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே துபாயில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் (Asia Cup Cricket Tournament), வங்க தேச அணியை, இலங்கை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. முதலில் பேட் செய்த‌ வங்க தேசம், 7 விக்கெட்டை இழந்து 183 ரன்களை 20 ஓவர்களில் எடுத்தது. பின்னர் பேட் செய்த இலங்கை அணி, 19.2 ஓவர்களில், 8 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இலங்கை அணி முதல் வெற்றியை பெற்றுள்ளது. வங்கதேசம் 2 தோல்விகளை அடைந்துள்ளது.