Ponniyin Selvan’s OTT license huge amount: தலை சுற்றவைக்கும் பொன்னியின் செல்வன்.. ஓடிடி உரிமம் இத்தனை கோடியா?

சென்னை: Ponniyin Selvan’s OTT license has been bought for a huge amount. பொன்னியன் செல்வன் திரைப்படத்தின் ஓடிடி உரிமம் மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்டுள்ளது.

மெட்ராஸ் டாக்கீஸ், லைக்கா தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்திலும் உருவாகியுள்ளது ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம். இது பிரபல தமிழ் எழுத்தாளரான கல்கியின் பொன்னியின் செல்வன் என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்ட இரு பாகங்களின் முதல் பாகம் ஆகும். இளங்கோ குமரவேல், பி.ஜெயமோகன் ஆகியோருடன் இணைந்து ரத்னம் திரைக்கதையை எழுதியுள்ளார்.

இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய் பச்சன், திரிசா, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லெக்ச்சுமி, அஸ்வின் ககுமனு, சோபிதா துலிபாலா, நடிகர்கள் சரத்குமார், பார்த்திபன், பிரபு, பிரகாஷ் ராஜ், ரகுமான் ஆகியோர் நடிக்கின்றனர். ஏ. ஆர். ரகுமான் இசைமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பொன்னியின் செல்வன் முதலில் ஒரே தொகுப்பாக எடுக்கும் நோக்குடன் இருந்தது. பின்னர் இரு பாகங்களாகப் பிரிக்கப்பட்டு, அதில் முதல் பாகமானப் பொன்னியின் செல்வன்-1 என செப்டம்பர் 30ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் நிறுவனம் ஒரு மிகப்பெரிய தொகைக்கு வாங்கி இருக்கிறது. தலைசுற்றவைக்கும் அந்த பிரம்மாண்ட தொகை எவ்வளவு என தெரியுமா? டிஜிட்டல் ஸ்ட்ரீமிங்க் உரிமைக்கான தொகை ரூ.125 கோடியாம். அதாவது 16 மில்லியன் அமெரிக்க டாலரகை் கொடுத்து அமேசான் பிரைம் வீடியோ வாங்கியுள்ளது.