ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து (Train Service Stop Pampan Bridge) ராமேசுவரம் தீவுக்கு செல்வதற்காக கடலில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயிலவே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பாலம் கடந்த 1914ம் ஆண்டு செயல்பட்டு வருகிறது. இப்பாலம் நூற்றாண்டை கடந்து செயல்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலையால் பாம்பன் கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. மேலும் கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் குறைந்த அளவிலான வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தூக்குப்பாலத்தில் பொருத்தப்பட்டிருந்த சென்சார் கருவி திடீரென்று பழுதடைந்துள்ளது. இது பற்றி ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அது மட்டுமின்றி ரயில்கள் கடக்கும் சமயத்தில் பாம்பன் ரயில் பாலத்தில் அதிர்வுகள் அதிகளவு இருந்துள்ளது.
இதன் காரணமாகவே ராமேசுவரம், மதுரை ரயில் நேற்று ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதே போன்று மதுரையில் இருந்து ராமேசுவரம் புறப்பட்ட ரயில் மண்டபம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. சென்னையில் இருந்து நேற்று (டிசம்பர் 22) இரவு ராமேசுவரத்திற்கு சென்ற ரயில் இன்று (டிசம்பர் 23) அதிகாலை 4 மணியளவில் மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் மதுரையில் இருந்து ரயில்வே அதிகாரிகள் பாம்பன் பாலம் சென்று தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். அநேகமாக இன்று மாலைக்குள் தொழில்நுட்ப கோளாறு சரி செய்ய முடியவில்லை எனில் பெங்களூருவில் இருந்து அதிகாரிகள் ராமேசுவரம் அழைத்து வரப்படுவார்கள் என கூறப்படுகிறது. திடீரென்று ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். ராமேசுவரம் சுற்றுலா வந்தவர்களும் ரயிலில் செல்ல முடியாததால் பெருத்த ஏமாற்றத்துடன் சாலை மார்க்கமாக ராமேசுவரம் சென்று வருகின்றனர்.
முந்தைய செய்தியை பார்க்க:Highways Road Parking: பாலக்கோடு: எம்.ஜி.சாலையை இருபுறமும் ஒரு வழி சாலையாக மாற்றி வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாற்றிய போலீசார்
முந்தைய செய்தியை பார்க்க:Elon Musk Says He Will Resign As Twitter Ceo: முட்டாள் மாதிரி ஒருவர் சி.இ.ஓ. கிடைத்தால் நான் ராஜினாமா செய்கிறேன்: எலான் மஸ்க்



