Highways Road Parking: பாலக்கோடு: எம்.ஜி.சாலையை இருபுறமும் ஒரு வழி சாலையாக மாற்றி வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாற்றிய போலீசார்

பாலக்கோடு: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு (Highways Road Parking) நகரம் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. தென் தமிழகத்தில் ஓசூர், பெங்களூரு செல்பவர்கள் இந்த ஊரை பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தினமும் வாகனங்களும், பொதுமக்களின் கூட்ட நெரிசலும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதே போன்று பாலக்கோடு பைபாஸ் மற்றும் எம்.ஜி.சாலை எப்போதும் கூட்ட நெரிசலும், வாகனங்களும் சென்று கொண்டே இருக்கின்ற மிக முக்கிய சாலை ஆகும்.

அதே போன்று பாலக்கோடு நகர பேருந்து நிலையத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களுக்கும் பல பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள பேருந்து நிறுத்தத்தை வணிக நிறுவனங்கள் மற்றும் ஆட்டோக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

இதனால் பயணிகள் மிகப்பெரிய துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். சில நேரங்களில் விபத்துகளும் நேரிடுகிறது.
ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தும் பாலக்கோடு பேரூராட்சி மற்றும் காவல்துறையினர் கண்டு கொள்ளாமல் உள்ளனர். பேருந்து நிலையம் முழுமையாக வாகனங்கள் நிறுத்தும் இடமாகவும் கடை வைத்து வியாபாரம் செய்து வருவதால் பயணிகளுக்கு மிகப்பெரிய இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மேலும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வேண்டும் என்றால் தருமபுரியில் இருந்து ஓசூரில் இருந்து வருகின்ற பேருந்துகள் பாலக்கோடு புறவழி சாலை வழியாக வந்து எம்.ஜி. சாலை வழியாக பேருந்து நிலையம் செல்ல வேண்டும். ஆனால் அப்படி செய்யாமல் எம்.ஜி. சாலையின் இரண்டு புறமும் ஒரு வழி பாதை என்று மாற்றப்பட்டு அந்த சாலையில் ஒரு சில தனியார் வணிக நிறுவனங்களுக்கு வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாற்றி கொடுத்துள்ளனர் பாலக்கோடு காவல்துறையினர்.

சில தினங்களுக்கு முன்னர் பாலக்கோடு உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் சிந்து தலைமையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் ஒரு தலை பட்சமாக பேரூராட்சி மற்றும் காவல்துறையினர் இருப்பது வேதனைக்கு உரிய செயலாகவே இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே இனிமேலாவது பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் போக்குவரத்து நெரிசலை குறைத்தும், ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தயை பார்க்க:Today Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (23.12.2022)

முந்தைய செய்தயை பார்க்க:New Covid Variants: புதிய கொரோனா அச்சுறுத்தல்: முகக்கவசம், தனிமனித இடைவெளி கடைப்பிடிக்க மத்திய அமைச்சர் வலியுறுத்தல்