Guidelines for Airports: கொரோனா பரவல் அதிகரிப்பு: விமான நிலையங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: Due to the increase in the spread of corona virus, guidelines have been published for international airports to follow. கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக சர்வதேச விமான நிலையங்கள் கடைபிடிக்கவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பிறப்பிடமான சீனாவில் தொடர்ந்து தொற்று அதிகரித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகளில் தற்போது கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இதனிடையே இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு 3 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன் விபரம்:
பயணிகளுக்கிடையே சமூக இடைவெளி கடைபிடக்கப்பட வேண்டும்.

கொரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக அந்த நபர் தனிமைபடுத்தப்பட வேண்டும், உடனடியாக தனிமை படுத்தும் அறைக்கு சிகிச்சைக்காக சம்மந்தப்பட்ட நபரை அழைத்து செல்ல வேண்டும்.

விமானத்தில் இருநரது இறங்கி வரும் பயணிக்கு நுழைவு வாயிலில் வெப்ப பரிசோதனை சுகாதார அதிகாரிகள் முன்பு செய்ய வேண்டும்.

ராண்டம் முறையில் 2% பயணிகளுக்கு பரிசோதனைக்கு உட்படுத்த செய்ய வேண்டும்.

பரிசோதனைக்காக மாதிரியை கொடுத்த பின்னர் அந்த பயணிகள் தங்களது வீடுகளுக்கு சொல்லலாம்.

ஒருவேளை மாதிரி பரிசோதனையில் பயணிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டால், அந்த மாதிரியை மேல் ஆய்வுக்காக INSACOG ஆய்வகத்துக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நபரை கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு தனிமைபடுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும்.

அதேபோல வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் தங்களை சுயபரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ள வேண்டும், ஒருவேளை கொரோனா அறிகுறி இருந்தால் அவர்கள் உடனடியாக கொரோனா அவசர எண்ணை தொடர்புகொள்ளலாம்.

12 வயதுக்குட்ட சிறார்களுக்கு ராண்டம் பரிசோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது, ஒருவேளை அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்தால் அவர்களுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைப்படி சிகிச்சை பெற வேண்டும் என அறிவிறுத்தப்பட்டுள்ளது.