Traffic diversion on every Sunday: சென்னையில் நாளை முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: Traffic diversion on every Sunday in besant nagar. சென்னையில் நாளை முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் போக்குவரத்து மாற்றம் செய்து சென்னை போக்குவரத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை பெசன்ட் நகர், 6வது அவென்யூ கிழக்கு பகுதியில் 32வது குறுக்கு தெருவிலிருந்து 3வது பிரதான சாலை சந்திப்பு வரை “Car-Free Sunday” நிகழ்ச்சியானது 04.09.2022 முதல் 23.10.2022 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை 06.00 மணி முதல் 09.00 மணி வரை நடைபெறும். மேற்கண்ட பகுதியில் தி இந்து மற்றும் சென்னை பெருநகர போகுவரத்து காவல் துறையால் இணைந்து நடத்தப்படும் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடும் பொது மக்களுக்கு இந்த பகுதி பயன்படுத்தப்படும். இந்நிகழ்ச்சிக்காக பின்வரும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.

7வது நிழற்சாலையிலிருந்து 6வது நிழற்சாலை வரை எலியட்ஸ் கடற்கரைக்கு செல்ல உத்தேசித்துள்ள வாகனங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. மேலும் அவை இலக்கை அடைய 16வது குறுக்குத் தெரு வழியாக 2வது நிழற்சாலையை நோக்கி திருப்பி விடப்படும்.

16வது குறுக்குத் தெருவில் இருந்து 6வது நிழற்சாலையை நோக்கிச் செல்ல வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும் அவை 2வது நிழற்சாலை மற்றும் 16வது குறுக்குத் தெரு சந்திப்பில் திருப்பி விடப்படும்.

3வது மெயின் ரோட்டில் இருந்து 6வது நிழற்சாலையை நோக்கி செல்லும் வாகனங்கள் தடைசெய்யப்பட்டு, 3வது மெயின் ரோடு மற்றும் 2வது நிழற்சாலை சந்திப்பில் திருப்பி விடப்படும்.

4வது மெயின் ரோடு மற்றும் 5வது நிழற்சாலையில் இருந்து 6வது நிழற்சாலை வழியாக எலியட்ஸ் கடற்கரைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன, அவை மேலும் 4வது மெயின் ரோடு மற்றும் 5வது நிழற்சாலை வழியாக திருப்பி விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல்துறையினருக்கு டிஜிபி பாராட்டு:
கல்லூரி அபிவிருத்திக்காக கடன் பெற்று தருவதாக கூறி ரூ 5.46 கோடி பெற்று மோசடி செய்த 4 நபர்களையும், செல்போன் உரையாடல் செயலி மூலம் ரூ. 56 லட்சம் பணத்தை ஏமாற்றிய 2 நபர்களை கோவாவிலும், லோன் தருவதாக செல்போன் செயலி மூலம் பணம் பறித்து மோசடி செய்த 4 நபர்களை உத்திரபிரதேசம் மற்றும் ஹரியானாவிலும் கைது செய்த சென்னை பெருநகர காவல்துறையினரை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு, மனதார பாராட்டினார்.