AAI Recruitment 2022 : டிப்ளமோ மற்றும் பட்டம் பெற்றவர்களுக்கு ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவில் வேலை வாய்ப்புகள்

இந்திய விமான நிலைய ஆணையம் (AAI Recruitment 2022 ) ஜூனியர் மற்றும் சீனியர் உதவியாளர் பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 156 பணியிடங்கள் நிரப்பப்படும். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் செப்டம்பர் 1 முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30.

வேலை விவரம்:
இளநிலை உதவியாளர் (தீயணைப்பு சேவை) -132
இளநிலை உதவியாளர் (அலுவலகம்) -10
மூத்த உதவியாளர் (கணக்குகள்) – 13
மூத்த உதவியாளர் (அதிகாரப்பூர்வ மொழி)–1

கல்வி தகுதி (Educational qualification):
இளநிலை உதவி தீயணைப்பு சேவை:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல் / ஆட்டோமொபைல் / தீயணைப்பு துறையில் 10 + 3 ஆண்டுகள் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

இளநிலை உதவியாளர் (Office):
தட்டச்சில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு வேகம் ஆங்கிலத்தில் 30 wpm அல்லது இந்தியில் 25 wpm ஆக இருக்க வேண்டும்.

மூத்த உதவியாளர் (கணக்குகள்):
03 முதல் 06 மாத கணினி பயிற்சி பாடத்துடன் BCom பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மூத்த உதவியாளர் (அதிகாரப்பூர்வ மொழி):
இந்தி மற்றும் ஆங்கிலம் கட்டாய / விருப்பப் பாடங்களாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இந்தி/ஆங்கிலத்தில் முதுகலை முடித்திருக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு AAI இணையதளத்தைப் பார்க்கவும்: https://www.aai.aero/en/recruitment/release/284246.

வயது எல்லை:
குறைந்தபட்ச வயது: 18 ஆண்டுகள்.
அதிகபட்ச வயது: 30 ஆண்டுகள்.
25/08/2022 தேதியின்படி OBC (A non-creamy layer) க்கு 3 ஆண்டுகள் வயது தளர்வு மற்றும் 5/08/2022 அன்று SC/ST க்கு 5 ஆண்டுகள்

விண்ணப்பக் கட்டணம்:
பொது / OBC / IWS : 1000/-
SC/ST/PH/ அனைத்து வகை பெண்களுக்கு : 0/-
எவ்வாறாயினும், அனைத்து விண்ணப்பதாரர்களும் கரோனாக்கான உடல்நலம் மற்றும் சுகாதார பரிசோதனைக்காக ரூ.90/- கட்டணம் செலுத்த வேண்டும்.

சம்பள விவரம்:
இளநிலை உதவியாளர் (தீயணைப்பாளர்) – ரூ. 31000-92000/-
இளநிலை உதவியாளர் (அலுவலகம்) – ரூ. 31000-92000/-
மூத்த உதவியாளர் (கணக்குகள்) – ரூ.36000-110000/-
மூத்த உதவியாளர் (அதிகாரப்பூர்வ மொழி) – ரூ.36000-110000/-

விண்ணப்பச் சமர்ப்பிப்பு:
ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த இணையதளத்தைப் பார்க்கவும்: https://www.aai.aero/en/careers/recruitment