CM Bosavaraj Bommai : மாநிலத்தில் சிசு இறப்பு விகிதத்தை ஒற்றை இலக்கமாக‌ குறைக்க முடிவு: முதல்வர் பசவராஜ் பொம்மை

பெங்களூரு : Reduce the infant mortality : மாநிலத்தில் பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம் 2 சதவீதமாக உள்ளதை, ஒற்றை இலக்கமாக‌ குறைக்க முடிவு செய்துள்ளோம் என்று முதல்வர் பசவராஜ பொம்மை தெரிவித்தார்.

பெங்களூரு தனியார் குழந்தைகள் மருத்துவமனை இன்று ஏற்பாடு செய்திருந்த குழந்தை மருத்துவத்தில் சிறப்பு மேம்படுத்தல்கள் குறித்த மாநாட்டில் கலந்துகொண்டு அவர் பேசியது: மகப்பேறு இறப்பு விகிதமும் குறைய வேண்டும். மாநிலத்தின் 5, 6 மாவட்டங்களில் இறப்பு சத‌விகிதம் குறையவில்லை (The death rate did not decrease). இதன்காரணமாக, மாநில வரலாற்றில் முதன்முறையாக, வளர்ச்சியை விரும்பும் வட்டங்கள் கண்டறியப்பட்டு, கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து குறைபாடு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் சுகாதார தரத்தை வைத்து வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த 5 மாவட்டங்களிலும் சிறந்த வசதிகளை ஏற்படுத்தித் தருவதன் மூலம் குழந்தைகள் இறப்பு விகித அளவைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான இந்தப் பணியில் எங்களுடன் கைகோர்க்குமாறு குழந்தைகள் நல மருத்துவர்கள் ஒன்றிணைய வேண்டும்.

கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான நிதி பட்ஜெட்டில் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குவதில் சிறப்பு கவனம் (Special focus on elimination of malnutrition) செலுத்தப்பட்டுள்ளது. கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு, பொதுவான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கும் வழங்கப்படுகிறது. அங்கன்வாடிகளில் உள்ள குழந்தைகளுக்கு நல்ல உணவு வழங்குவது மட்டுமின்றி, சிறப்பு சத்தான உணவும் வழங்கப்படுகிறது. நாங்கள் உணர்வு பூர்வமான அரசாக செலயல்படுகிறோம். வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்வி, உள்கட்டமைப்பு உள்ளிட்ட தொழில்நுட்பக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

நம்முடையது தொழில்நுட்பம் சார்ந்த மாநிலம். கிராமங்களில் இருந்தாலும் நமது இளைஞர்கள் தொழில் நுட்பத்தில் தேர்ச்சி (Youth mastery of technology) பெற்றவர்களாக இருக்க வேண்டும். எங்கள் அரசு இந்த விஷயத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. நாம் அனைவரும் தீர்வின் ஒரு பகுதியாக இருப்போம். சுகாதார சவால்களை வெல்வோம். தாயின் கருவறையிலிருந்து பூமியின் கருவறை வரையிலான பயணத்தின் மத்தியில் நமது பங்கை சிறப்பாகச் செய்வோம். கருவுற்றதிலிருந்து ஒரு முழுமையான மனிதனை உருவாக்குவது ஒரு அதிசயம். இந்த விஷயத்தில் குழந்தை மருத்துவரின் பங்கு கருத்தரிப்பிலிருந்தே தொடங்குகிறது. தாயின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால், குழந்தையின் ஆரோக்கியமும் பாதிக்கிறது.

எனவே வயிற்றில் இருந்தே குழந்தைக்கு ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும் (The baby needs to get nutrition from the womb itself). கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது அரசு மட்டுமின்றி சமூகத்தின் பொறுப்பு. ஊட்டச்சத்து குறைபாட்டால் நாட்டில் பார்வையற்றோர் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பல்வேறு பிரச்னைகளுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சரியான ஊட்டச்சத்தை வழங்கி, ஆரோக்கியமான சமுதாயத்தை த‌ட்டியெழுப்ப வேண்டிய நேரம் இது.

தாயின் ஆரோக்கியம், குடும்ப ஆரோக்கியம், குடும்பம் ஆகியவற்றிலிருந்து
பொருளாதார வலுவூட்டல், ஆரோக்கியமான குழந்தை பிறப்பு, குழந்தை கல்வி உள்ளிட்ட விரிவான வளர்ச்சி இருக்க வேண்டும். மாநிலத்தில் அறிவியல் திறன் கொண்ட அமைச்சரும், அதிகாரக் குழுவும் முற்போக்கு சிந்தனையுள்ள அரசும் (Progressive minded government) உள்ளது. இந்த மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் சமுதாய நலனைக் கருத்தில் கொண்டு ஏற்றுக்கொள்ளப்படும் என்றார்.