Riot in Kallakurichi : கள்ளக்குறிச்சியில் கலவரம் ஏற்பட்டதையடுத்து 144 தடை உத்தரவு

Image Credit : Twitter.

கள்ளக்குறிச்சி: Riots in Kallakurichi, Tamil Nadu : கள்ளக்குறிச்சியில் கலவரம் ஏற்பட்டதையடுத்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே பிளஸ் 2 படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி உயிரிழந்த தொடர்பாக தனியார் பள்ளியில் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இதனையடுத்து கலவரத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸ் வாகனத்தின் மீது கல் வீசியதோடு, பள்ளியின் அருகே நின்றிருந்த டிராக்டர், பள்ளி பேருந்து ஆகியவற்றிற்கு தீ வைத்தனர் (set fire to the tractor and the school bus). இதனையடுத்து கள்ளக்குறிச்சியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவ‌ட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி தற்கொலை (Plus 2 student committed suicide) செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் அம்மாணவியில் உறவினர்கள் இது தற்கொலை இல்லை. மாணவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி, அமைதியான முறையில் கடந்த 5 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டத்தில் அதிக அளவில் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட பள்ளியின் மீது கற்களை வீசி சூறையாடினர். இதனை தடுக்க முயன்ற போலீஸார் மீதும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கற்களை வீசி தாக்கினர். இதில் டிஐஜி உள்பட 20 பேர் காயமடைந்தனர். பள்ளி வாகனங்கள் அடித்து, நொறுக்கி தீயிட்டனர். காவல்துறையின் வாகனத்தை கற்களை வீசி தாக்கியதோடு தீயும் வைக்கப்பட்டது. அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியதையடுத்து (A peaceful protest turned into a riot), கள்ளக்குறிச்சி வட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் அறிவுறுத்தலின்படி உள்துறை செயலாளர், காவல்துறை டிஜிபி (Police DGP) உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டம் நடைபெற்ற பகுதிக்கு சென்றுள்ளனர். கலவரத்தையடுத்து வன்முறையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் நிலவி வரும் சூழல் வருத்தமளிக்கிறது. மாணவியின் மரணம் குறித்து நடைபெறும் வரும் காவல்துறை விசாரணையின் முடிவில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் (Chief Minister M. K. Stalin) தனது சுட்டுரை பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மாணவியில் மரணத்திற்கு நீதிகேட்டு நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியதையடுத்து, அப்பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் 144 தடை உத்தரவு (Prohibitory order 144 has been issued in the area) பிறப்பிக்கப்பட்டுள்ளது.