D.K.Shivakumar : என்னையும் சித்தராமையாவையும் நினைக்காவிட்டால் பாஜகவினருக்கு தூக்கம் வராது: டி.கே. சிவகுமார்

பெங்களூரு : BJP party people can’t sleep : என்னையும் சித்தராமையாவையும் நினைக்காவிட்டால் பாஜகவினருக்கு தூக்கம் வராது என்று மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் தெரிவித்தார்.

பெங்களூரு சதாசிவநகரில் உள்ள தனது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: பாஜக கட்சியினர் தினமும் தூங்குவதற்கு செல்லும் முன் என்னையும், எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையாவையும் நினைத்துக் கொள்கின்றனர். காரணம் எங்கள் மீது அவர்களுக்கு உள்ள அன்புதான் (It’s their love). இல்லை என்றால் அவர்களுக்கு தூக்கம் வராது.

சித்தராமையாவின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்குப் பிறகு காங்கிரஸ் சிதைந்துவிடும் சிலர் கூறி வருகின்றனர். சிதைந்து விட காங்கிரஸ் கட்சி ஒன்றும் பூசணிக்காயும் (Congress party is not a pumpkin) இல்லை. மண்பானையும் இல்லை என்றார்.

மேலும் துணை காவல் ஆய்வாளர் நியமன‌த்தில் நடந்துள்ள முறைகேடு தொடர்பான வழக்கில் 50 பேரை மட்டுமே கைது செய்துள்ளனர். இதனை விசாரிக்க நீதி விசாரணை வேண்டும் (There should be a judicial investigation) என்று கோரிக்கை வைத்தோம், அது நடக்கவில்லை. குறைந்தபட்சம் 164-வது பிரிவின்படி கைது செய்யப்பட்ட நபரை நீதிபதி முன் ஆஜர்படுத்தி வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும். குற்றப்பத்திரிகையில், பணி நியமனங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், அவற்றையும் விசாரிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த சட்ட விரோத செயலில் முதல்வரும், அமைச்சர்களும் தொடர்பில்லை என்றால், விசாரணை நடத்த பயப்படுவது ஏன்?. உள்துறை அமைச்சர் மற்றும் உயர் கல்வி அமைச்சரின் அழுத்தத்தால், இந்த வழக்கில் கைதானவர்கள் விசாரிக்கப்படாமல் அனுப்பப்பட்டனர். உயர்கல்வித்துறை அமைச்சர் அஸ்வத் (Minister Aswath Narayana). நாராயணா மாநிலத்தில் ஊழல் மிகுந்த அரசியல்வாதி என்று பெயர் எடுத்துள்ளார்.

துணை காவல் ஆய்வாளர் நியமனம் தொடர்பான முறைகேடு வழக்கில் நேர்மையான விசாரணை நடைபெறவில்லை என நினைக்கிறேன். நீதிமன்றத்தில் வாக்குமூலம் (Statement in court) அளிக்க கைது செய்யப்பட்ட அதிகாரியே தயாராக உள்ளபோது அதனை ஏன் பதிவு செய்யவில்லை என்பது புரியவில்லை.

பாஜக‌வில் உள்கட்சி பூசல் அதிகம். அதனால் அவர்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது. இதன்காரணமாகத்தான் அக்கட்சியின் தேசியத் தலைவர்கள் மீண்டும், மீண்டும் மாநிலத்திற்கு வந்து செல்கின்றனர். மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெறவில்லை (There is no BJP rule in the state). பல கட்சிகளின் கூட்டணி ஆட்சிதான் நடக்கிறது. முதல்வர் தவிர, அமைச்சர்களாக பதவி வகிப்பவர்கள், காங்கிரஸ் மற்றும் ஜனதா தளத்திலிருந்து சென்றவர்கள் உள்ளனர். இதனால், பாஜகவினரின் பதட்டம் அதிகரித்துள்ளது.

தற்கொலை செய்து கொண்ட ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீலின் மனைவி கவர்னருக்கு கடிதம் எழுதி உள்ளார். ​​இந்த வழக்கை மூடி மறைக்க அரசு முயற்சிக்கிறது. ஈஸ்வரப்பாவை மட்டுமின்றி, மற்ற வழக்குகளில் சிக்கியுள்ள அமைச்சர்களையும் காப்பாற்ற முயற்சிக்கின்றனர். மாநிலத்தில் அனைத்து துறைகளிலும் தொடர்ந்து ஊழல் (Corruption persists in all sectors) நடைபெறுகிறது.

அனைத்திலும் அமைச்சர்களை பாதுகாக்கும் முயற்சிகள் நடக்கின்றன. இதற்காக ஒப்பந்ததாரரின் மனைவி கவர்னருக்கு கடிதம் (Letter to the Governor) எழுதியுள்ளார். பணியை முடித்த ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீலிடம் அமைச்சர் கமிஷன் கேட்டதால், கமிஷன் கொடுக்க விருப்பாத அவர் தற்கொலை செய்து கொண்டதாக‌ பாஜக தொண்டர் ஒருவரே தெரிவித்துள்ளார்.

அக்னிபத் யோஜனா திட்டத்தை எதிர்ப்பவர்கள் தேசவிரோதிகள் என்று கூறுகின்றனர். அவர்கள் தேசியவாதிகள் இல்லையா?. இந்த திட்டத்தின் முதலில் பாஜகவை சேர்ந்த அமைச்சர்கள் தங்கள் குழந்தைகளை ராணுவத்தில் சேர்க்கட்டும் (Let ministers enroll their children in the army). அவர்கள் 4 ஆண்டுகள் நாட்டுக்கு சேவை செய்யட்டும். பாஜகவினரின் பிள்ளைகள் மட்டுமே மருத்துவர்களாக, பொறியாளர்களாக, தொழிலதிபர்களாக வர வேண்டும். ஏழைகளின் குழந்தைகள் மட்டும் ராணுவத்தில் சேர வேண்டுமா? என்றார்.