Tn Assembly 2023 First Session: ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு

சென்னை: தமிழக சட்டசபை கூட்டம் இன்று (ஜனவரி 9) காலை (Tn Assembly 2023 First Session) ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை தொடங்கினார். ஆளுநர் உரைக்கு பின்னர் இன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

அதன்படி சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும். அதில் சட்டசபையை எத்தனை நாட்களுக்கு நடத்துவது பற்றி முடிவு எடுக்கப்படும். அதே போல நாளை நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ம.தி.மு.க. மற்றும் வி.சிச.க உள்ளிட்ட கட்சிகள் கோஷங்களை எழுப்பினர். அதன் பின்னர் அவர் வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.