Notice To Dr Sharmika: சர்ச்சைக்குரிய வகையில் பேசும் சித்த மருத்துவர் ஷர்மிகாவுக்கு நோட்டீஸ்

சென்னை: சர்ச்சைக்குரிய வகையில் யூடியூப் வீடியோ (Notice To Dr Sharmika) மூலம் பேசும் வரும் சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சித்த மருத்துவத்தில் பல்வேறு நோய்களுக்கு மருந்து உள்ளது என்று பலரும் சமூக வலைதளங்கள் மூலமாக பேசி வருவதை சமீபகாலமாக பார்க்க முடிகிறது. அந்த வகையில் சித்தா மருத்துவர் ஷர்மிகா இணையதத்ல் தவறான மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருவதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. அதன்படி சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விளக்கம் கேட்டு இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் ஷர்மிகா இணையத்தில் வெளியிட்டு இருந்த சிலர் வீடியோக்களை அடிப்படையாகக் கொண்டு அவர் மீது தவறான தகவலை பரப்புகிறார் என்று புகார்கள் வந்தது. இதன் காரணமாக ஷர்மிகா 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய மருத்துவ ஆணையர் மற்றும் தாளாளர் கொண்ட குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நோட்டீசில் கூறப்பட்டுள்ளது. ஷர்மிகா சமீபகாலமாக ஆபாசமான கருத்துக்களை பொது வெளியில் வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.