Threw eggs at the savarkar photo: சாவர்க்கரின் புகைப்படத்தை மிதித்து, அதன் மீது முட்டையை வீசி, பின்னர் எரித்த‌தால் பரபரப்பு

Dharwad : இது காங்கிரஸ்காரர்களை மிரட்டும் முயற்சி என போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தீபக் சிஞ்சோர் கூறினார்.

தார்வாட்: Threw eggs at the savarkar photo: குடகு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக சென்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையாவின் வாகனம் மீது பாஜகவினர் முட்டைகளை வீசியதால், மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சித்தராமையாவின் கார் மீது கல்வீசி தாக்கியதை கண்டித்து தார்வாடில் நேற்று நடந்த போராட்டத்தில் வீர் சாவர்க்கரின் புகைப்படத்தை மிதித்தது மட்டுமின்றி, அந்த புகைப்படத்தின் மீது முட்டையை வீசி, பின்னர் எரித்தனர்.

சித்தராமையாவின் (Siddaramaiah) வாகனம் மீது முட்டை வீசப்பட்டதைக் கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. இதில், தார்வாட் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட வீரர் விநாயக் தாமோதர் சாவர்க்கர், உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா ஆகியோரின் புகைப்படத்தை எரித்தனர்.

போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தீபக் சிஞ்சோர் (Deepak Sinchor), வீர சாவர்க்கரின் புகைப்படத்தை எரித்தது குறித்து தெளிவுபடுத்தியதாவது, சித்தராமையாவின் கார் மீது முட்டை வீசியதைக் கண்டித்து, அமைதியான முறையில் போராட்டம் நடத்த முடிவு செய்தோம். ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தில் காங்கிரஸ் கட்சியினர் சிலர் ஆத்திரத்தில் உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திராவின் உருவ பொம்மையை எரித்தனர் என்பது உண்மைதான். ஆனால் நாங்கள் சாவர்க்கரின் புகைப்படத்தை எரிக்கவில்லை. இந்தப் பிரச்னை எங்கள் கவனத்துக்கு வரவில்லை. இது காங்கிரஸ்காரர்களை மிரட்ட பாஜக மேற்கொள்ளும் முயற்சியாகும் என்றார்.

வீர் சாவர்க்கரின் புகைப்படத்தை முட்டையிட்டு எரித்ததாக வதந்திகள் பரவிய நிலையில், ஆத்திரமடைந்த பாஜகவினர் இரவு நேரத்தில் துணைநகர் காவல் நிலையம் (Suburban Police Station) முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுதந்திரப் போராட்ட தியாகியின் உருவப்படத்தை அவமதித்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அண்மையில் குடகு மாவட்டத்திற்கு (Kodagu district) வெள்ளச் சேதங்களை பார்வையிடச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையாவின் கார் மீது பாஜக இளைஞரணியினர் முட்டை வீசினர். இதனை முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அமைச்சர் ஆர்.அசோக் உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்கள் கண்டித்தனர். ஜனநாயகத்தில் எதிர்ப்பு தெரிவிக்க அமைதியான முறையில் பல்வேறு வழிகள் உள்ளப்போது, இது போன்ற செயல்களை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.