Rajasthan state : டிராக்டர் – லாரி மோதல் : விபத்தில் 6 பலி, 20 பேர் காயம்

தில்லி: டிராக் மற்றும் டிராக்டர் இடையே நடந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்து 20 பேர் காயமடைந்துள்ள‌ சம்பவம் ராஜஸ்தான் (Rajasthan) பாலி மாவட்டத்தில் நடந்தது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக‌ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட்டுள்ளனர்.

டிராக்டர் டிரைலரில் சிலர் ஜெய்சல்மேர் மாவட்டத்தில் உள்ள‌ ராமதேவர் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தனராம். ராஜஸ்தான் பாலி மாவட்டம் சுமெர்பூர் (Sumerpur) அருகே வேகமாக வந்த லாரி, டிராக்டர் மீது மோதியுள்ளது. இதி நிகழ்விடத்திலேயே 6 பேர் உயிரிழந்துள்ளனர். 20 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

தகவலறிந்து அங்கு வந்த சுமெர்பூர் போலீசார் (Sumerpur Police) அம்புலன்ஸ்கள் மூலம் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலரது நிலைமை கவலைகிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இது குறித்து வழக்கு பதிந்த போலீசாரின் விசாரணையில், டிராக்டர் ஓட்டுநர் கவனக் குறைவாக வானம் ஓட்டி வந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் மேலும் தகவல்களை சேகரித்து வருகின்றனர். இந்த விபத்து காரணமாக சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் நீண்ட வரிசையில் வாகனங்கள் சாலையில் நின்றிருந்தன. இதனையடுத்து போலீசார், நெரிசலை சரி செய்து, வாகன போக்குவரத்திற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தனர்.

இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi) இரங்கல் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் இந்த கோர விபத்து நடந்துள்ளது. விபத்தில் சிலர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன் என்று பிரதமர் சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.

அதே போல ராஜஸ்தான் பாலியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழிப்புகள் ஏற்பட்டுள்ளன. உயிரிழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்தவர்கள் குணமடைய வேண்டுகிறேன் என்று துணை குடியரசு தலைவரின் (Vice President) அலுவலகம் சுட்டுரையில் பதிவு செய்துள்ளது.