திருவள்ளூர்: 5 people were arrested for Cannabis smuggling: திருத்தணி அருகே பேருந்தில் கஞ்சா கடத்தியதாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே ஆந்திர எல்லைப் பகுதியான பொன்பாடி சோதனைச் சாவடியில் திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளர் செபாஸ் கல்யாணத்துக்கு வந்த ரகசிய தகவல் வந்தது. தகவலின் பெயரில் திருத்தணி டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைத்து நேற்றிரவு முழுவதும் திருத்தணி பல்வேறு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து வந்த அரசுப் பேருந்தில் சோதனை செய்ததில், தமிழகத்திற்கு கடத்திவரப்பட்ட சுமார் 60 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த கணேஷ், அயனாவரத்தைச் சேர்ந்த சுரேஷ், பெரியார் நகரைச் சேர்ந்த செல்வராஜ், ஆவடி கோவில் பதாகை பகுதியை சேர்ந்தச் சுரேஷ் மற்றும் சென்னையைச் சேர்ந்த பரசுராமன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட 5 பேரையும் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
கும்மிடிப்பூண்டியில் ஒரே நாளில் 10 கடைகளில் திருட்டு:
கும்மிடிப்பூண்டியில் ஒரே நாளில் 10 கடைகளில் 2 லட்ச ரூபாய் ரொக்க பணமும் ஒரு வீட்டில் 15 சவரன் தங்க நகையும் கொள்ளை. தொடர் கொள்ளையில் ஈடுபட்ட மர்மமானவர்களை சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு முகமூடி அணிந்து வந்து கொள்ளையில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர். காவல்துறையினர் முறையான ரோந்து பணியில் ஈடுபடாததே கொள்ளைக்கான காரணம் என வியாபாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி காவல் சரக எல்லைகளான ஆரம்பாக்கம், கும்மிடிப்பூண்டி, சிப்காட் , கவரப்பேட்டை ஆகிய நான்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆரம்பாக்கம் பஜார் வீதியில் நான்கு பெட்டிக்கடைகள், பெத்திக்குப்பம் இணைப்புச் சாலையில் உள்ள ஆவின்பாலகம், ரெட்டம் பேடு கூட்டு சாலையில் சூப்பர் மார்க்கெட், கவரப்பேட்டையில் குளிர்பான கடை உள்பட 10 கடைகளில் சுமார் ரூ.5 லட்ம் மற்றும் பொருட்கள் கொள்ளை போனது.
அதேபோல் கவரப்பேட்டை அரசு பள்ளியின் பின்புறம் கீதாஞ்சலி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த 15 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு முகமூடி அணிந்து வந்து கொல்லையில் ஈடுபடும் மர்ம நபர்களைகளை தேடி வருகின்றனர். கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் ஒரே நாளில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கொள்ளை நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையினர் முறையான ரோந்து பணியில் ஈடுபடாதாலும் இது போன்ற கொள்ளை சம்பவம் நடைபெறுவது தொடர்கதை ஆகி வருவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர் மேலும் தொடர் கொள்ளை என்பது தொடர்கதை ஆகிவிட்டதால் விவசாயிகளும் வியாபாரிகளும் பெருத்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



