Ban withdrawn : அரசு அலுவலகங்களில் புகைப்படம், வீடியோ எடுக்க விதிக்கப்பட்ட தடை: திரும்பப் பெற்றது மாநில அரசு

பெங்களூரு: Government withdrawn the ban order : அரசு அலுவலகங்களில் புகைப்படம், வீடியோ எடுக்க விதிக்கப்பட்ட தடையை மாநில அரசு திரும்பப் பெற்றது.

அரசு அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்கள் அலுவலகத்தையோ, அங்கு பணிபுரிபவர்களையோ புகைப்படமோ அல்லது வீடியோவோ (taking photos and videos) எடுக்கக் கூடாது என வெள்ளிக்கிழமை தடை உத்தரவை மாநில அரசு பிறப்பித்தது. இது தொடர்பாக மாநில அரசு ஊழியர் சங்கம் சார்பில் எழுப்பப்பட்ட கோரிக்கையை அடுத்து இந்த நடவடிக்கையை மாநில அரசு மேற்கொண்டது.

இது தொடர்பாக மாநில அரசு ஊழியர் நலன் மற்றும் சீர்த்திருத்தத்துறை (Department of Employee Welfare and Reforms) முதன்மைச் செயலாளர் கே.வெங்கடேஷப்பா பிறப்பித்திருந்த உத்தரவில் இதனைத் தெரிவித்திருந்தார்.
அரசு அலுவலகங்களில் புகைப்படம், வீடியோ எடுக்க விதிக்கப்பட்ட தடை விதிக்கப்பட்டத்திற்கு மாநில அளவில் பரவலாக எதிர்ப்பு கிளம்பியது.

இதனையடுத்து முதல்வர் பசவராஜ் பொம்மையின் (Chief Minister Basavaraj bommai) உத்தரவின் பேரில், நள்ளிரவு முதல் அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதைத் தடை விதித்த‌ உத்தரவை மாநில அரசு திரும்பப் பெற்றுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு மாநிலத்தில் உள்ள பொதுமக்கள் உள்பட அனைவரிடத்திலும் வரவேற்பு கிடைத்துள்ளது.