Minister Anbil Mahesh Poiyamozhi : மாணவி தற்கொலைக்கு காரணமானவர்களுக்கு தக்க தண்டனை : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அரியலூர்: Appropriate punishment for those responsible for student suicide : நீட் தேர்வு பாடங்கள் கடினமாக உள்ளதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதற்கு காரணமானவர்களுக்கு தக்க தண்டனை பெற்று தரப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

அரியலூர் ரயில்வே குடியிருப்பு பகுதியை சேர்ந்த நடராஜன்-உமா தம்பதியினரின் மகள் நிஷாந்தி (Nishanthi). இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வில் 529 மதிப்பெண்களை பெற்றார்.

கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய நிஷாந்தி தோல்வி அடைந்தார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) நடைபெறவிருந்த நீட் தேர்வு (NEET Exam) தேர்வுக்கு விண்ணபித்திருந்த நிஷாந்தி, அதற்காக தனியார் அகாதெமியில் பயிற்சி மேற்கொண்டிருந்தார்.

வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதப்போது நிஷாந்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த அரியலூர் போலீஸார், நிஷாந்தியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் (Ariyalur Government Medical College) அனுமதித்தனர்.

மேலும் அவரது சடலத்தின் அருகே தனது குடும்பத்தினருக்கு நிஷாந்தி எழுதி உள்ள கடிதத்தில் நீட் தேர்வுகாக படித்து வந்த வேதியியல், உயிரியல் பாடங்கள் (Chemistry and Biology subjects) கடினமாக உள்ளதால் இந்த முடிவு எடுத்ததாக அதில் குறிப்பிட்டுள்ளார்.

நீட் தேர்வு எழுத 18.72 லட்சம் பேர் பதிவு செய்துள்ள நிலையில் அரியலூர் மாணவி நிஷாந்தி, கடிதம் எழுதி வைத்து விட்டு (writing a letter) தற்கொலை செய்து கொண்டுள்ளது. தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தக்க‌ தண்டனைப் பெற்றுத்தரப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி (Anbil Mahesh Poiyamozhi) தெரிவித்துள்ளார்.