K. Annamalai : டேன்டீ நிறுவனத்தை மத்திய அரசு ஏற்று நடத்த தயாராக உள்ளது : கே.அண்ணாமலை

சென்னை: The central government is ready to accept and run TANTEA: K. Annamalai : டேன்டீ நிறுவனத்தை மத்திய அரசு ஏற்று நடத்த தயாராக உள்ளது என்று கூடலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.

டேன்டீ (தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகம் லிமிடெட்) தொழிலாளர்களைப் பாதுகாக்க வலியுறுத்தி, திமுக அரசுக்கு எதிராக நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை பேசியது: இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படி 5 லட்சம் தொழிலாளர்கள் கூடலூர், கோத்தகிரி, கொடைக்கானல், கேரளா, அசாம், அந்தமான் நிக்கோபார் (5 lakh workers in Cuddalore, Kottagiri, Kodaikanal, Kerala, Assam, Andaman and Nicobar) உள்பட பல்வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டனர். இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு திமுக அரசு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டது.

மத்திய பாஜக அரசு இவர்களைக் காப்பாற்றுவதில் உறுதியாக உள்ளது. 199 ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கிந்திய கம்பெனி மூலம் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இருந்து இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு கொடிய நோய்களையும் பொருள் படுத்தாமல் காடுகளை அழித்து தேயிலைத் தோட்டங்களை உருவாக்கி வருவாயை ஈட்டிக் கொடுத்தது.
இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி தொழிலாளர்களுக்கு 10 ஆயிரம் வீடுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது (The central government has provided 10,000 houses to workers of Indian origin).

அந்த வீடுகளில் உள்ள வசதிகள் இங்கு தமிழக அரசால் வழங்கப்படும் வீடுகளில் இல்லை. தற்போதுள்ள திமுக அரசு 5,315 ஏக்கர் தேயிலைத் தோட்டங்களை மீண்டும் வனத்துறைக்கு ஒப்படைக்க முடிவெடுத்துள்ளதன் மூலம் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது . ஆட்சியின் தோல்வியை ஒப்புக்கொண்டு, லாபகரமாக இருந்த நிலையில் டேன்டீ நிர்வாகம் கடந்த காலங்களில் முறையாக செயல்படாததால் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. ரூ. 211 கோடி நஷ்டத்தில் இருக்கும் டேன்டீ நிறுவனத்தை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் (Loss-making Dandee should be handed over to the central government). டேன்டீ நிறுவனத்தை ஏற்று நடத்த தயாராக மத்திய அரசு உள்ளது என்றார்.