AIADMK general committee case Today : இன்று அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பான‌ இறுதி விசாரணை

டெல்லி: Today is the final hearing regarding the AIADMK general committee case : கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து சார்பில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு செய்யப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது (A bench headed by Justice M.R. Shah is hearing the appeal filed by O. Panneerselvam). இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக திங்கள்கிழமை(நவ.21) இறுதி விசாரணை நடைபெற உள்ளது.

இந்த மனுவுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்குரைஞர் பாலாஜி சீனுவாசன் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார் (On behalf of Edappadi Palaniswami, advocate Balaji Sinuvasan has filed a reply in the Supreme Court). அதில், அதிமுக பொதுக் குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர். எனவே தற்போது ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு அற்பமான ஒன்று ஆகும்.

தொண்டர்கள் விருப்பத்திற்கு ஏற்பவும், கட்சியின் நலனைக்கருதியும் ஒற்றை தலைமை என்பது ஏற்படுத்தப்பட்டது (According to the wishes of the volunteers and in the interest of the party, single leadership was established). கட்சியின் பொதுக்குழுவுக்கே அனைத்து அதிகாரமும் உள்ளது, எனவே அதன் முடிவே இறுதியானது என தெரிவித்துள்ளார்.