CC camera Accident : பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் விழும் கார் : கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள பதர வைக்கும் காட்சி

மங்களூரு: CC camera Accident : தென் கன்னடா மாவட்டம் புத்தூர் வட்டத்தில் உள்ள கணியூர் அருகே மஞ்சேஷ்வர்-சுப்ரமணிய வில் உள்ள மாநில நெடுஞ்சாலையில், பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் கட்டுப்பாட்டை இழந்த கார் விழுந்துள்ளது இந்த காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் (சிசி கேமரா) பதிவாகியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்த காட்சி அனைவரையும் பதர வைப்பதாக உள்ளது.

தென் கன்னடம் மாவட்டத்தில் கடந்த நான்கைந்து நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக அனைத்து ஓடைகளும், ஆறுகளும் நிரம்பி வழிகின்றன. கனமழைக்கு இடையே கணியூர் அருகே வேகமாக வந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்தது. இதனால் காரில் இருந்தவர்கள் தண்ணீரில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவம் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வேகமாக செல்லும் பாலம் ஒன்றில் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுகிறது. இதனால் அந்த பாலத்தின் தடுப்புச்சுவர் முற்றிலும் சேதமடைந்துள்ளது. சாலையோரம் நடப்பட்டிருந்த 3 மைல்கள் உடைந்துள்ளன. ஆற்றிவில் விழுந்த காரில் எத்தனை பேர் இருந்தனர். அவர்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்து எந்த விவரமும் தெரியவில்லை. ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கார் தொடர்பான தகவலும் கிடைக்கவில்லை. அம்மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்வதால் தேடும் பணி தாமதமாகியுள்ளது.

இது குறித்து புத்தூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். கட்டுப்பாட்டை இழந்து கார் ஆற்றில் விழும் காட்சி அனைவரையும் பதர வைப்பதாக உள்ளது. தென் கன்னடம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை முதல் 3 நாள்களுக்கு சிகப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் அம்மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரா கேட்டுக் கொண்டுள்ளார்.