AIADMK General Body Meeting : நாளை அதிமுக பொதுக்குழுக் நடைபெறுமா ?

will-aiadmk-general-body-meeting-be-held-tomorrow

சென்னை: AIADMK General Body Meeting : அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணியில் சார்பில் கூட்டப்பட்டுள்ள பொதுக்குழுக் கூட்டம் திங்கள்கிழமை (ஜூலை 11) நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி இருந்து வந்த நிலையில், அண்மையில் ஒற்றைத் தலைமை தொடர்பான பிரச்னை எழுந்தது. இதனால் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர்களுக்கிடையே பிரச்னை எழுந்தது. இதனையடுத்து இருவரும் தலைமையில் அக்கட்சியினர் 2 அணிகளாக பிரிந்துள்ளனர்.

இரு அணிகளிடையே யாருக்கு பலம் அதிகம் என்பதனை நிரூப்பிக்கும் வகையில் இருவரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவைக் கூட்டி, தனது பலத்தை நிரூப்பித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை அடையலாம் என்று எடப்பாடி அணியினர் திட்டமிட்டு, பொதுக்குழுவிற்கான பணியை மேற்கொண்டுள்ளனர்.

அதே நேரத்தில் ஒருங்கிணைப்பாளர் இல்லாமல் நடத்தப்படும் பொதுக்குழு சட்டப்படி செல்லாது. அதில் நிறைவேற்றப்படும் எந்த தீர்மானமும் செல்லாது எனவும், எனவே அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்க வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் தரப்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

பொதுக்குழுவிற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விசாரணைக்கு பிறகு தீர்ப்பை திங்கள்கிழமை (ஜூலை 11) காலை 9 மணிக்கு வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை காலை 9.15 மணிக்கு அதிமுக பொதுக்குழு கூடும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்து, அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளது. பொதுக்குழுவில் கலந்து கொள்ள உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் ஞாயிற்றுகிழமை சென்னைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி தரப்பு மும்முரமாக அதிமுக பொதுக்குழுவை கூட்டம் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், அதற்கு தடை வாங்கும் முனைப்பில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்நோக்கி உள்ளது. தீர்ப்பிற்கு பிறகே பொதுக்குழுக் கூடுமா? அல்லது தடை செய்யப்படுமா? என்று தெரியவரும். இதனால் இருதரப்பு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Also Read : நித்யானந்த சுவாமியை திருமணம் செய்யப் போவதாக கூறி சர்ச்சையில் சிக்கிய‌ நடிகை பிரியா ஆனந்த்

will aiadmk general body meeting be held tomorrow