petrol and diesel price : கடந்த ஒரு மாதமாக மும்பை மற்றும் பிற நகரங்களில் ஒரே சீராக உள்ள‌ பெட்ரோல், டீசல் விலை

petrol and diesel price : கடந்த‌ ஒரு மாதத்திற்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாறாமல் உள்ளது. எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் (OMC) பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நுகர்வோருக்கு சீராக வைத்திருக்கின்றன. நிகழாண்டு மே 21-ஆம் தேதியன்று பெட்ரோலுக்கான கலால் வரியை லிட்டருக்கு ரூ. 8 ஆகவும், டீசல் மீது லிட்டருக்கு ரூ. 6 ரூபாய் குறைக்கப்படுவதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தபோது கடைசியாக எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்பட்டது.

அண்மைகாலமாக‌, பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த‌ நிலையில், ஒரு மாதத்துக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை ஒரே சீராக உள்ளது. கடந்த மே மாதம் 21-ம் தேதி மத்திய கலால் வரியை குறைப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தபோது எரிபொருள் விலையில் கடைசியாக‌ பெரிய மாற்றம் செய்யப்பட்டது. இதனையடுத்து, பெட்ரோல், டீசல் விலை வெகுவாக குறைக்கப்பட்டது. அதிகரித்திருந்த பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அப்போதிருந்து, டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 100 க்கு அருகில் உள்ளன‌ அதே நேரத்தில் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 95 க்கு ஜூலை 10-ஆம் தேதி நிலவரப்படி உள்ளன. டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ .96.72க்கு விற்பனை செய்யப்படுகிறது, அங்கு டீசல் விலை லிட்டருக்கு ரூ. 89.62. மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 111.35 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 97.28 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

கொல்கத்தா மற்றும் சென்னையிலும் எரிபொருள் விலையில் எந்த ஏற்ற இறக்கமும் இல்லை. கொல்கத்தாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 106.03 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.25 ஆகவும் உள்ளது. சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு முறையே ரூ. 102.63 மற்றும் ரூ. 94.25 ஆக உள்ளது. கடந்த ஒரு மாதமாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாததற்கு மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.