Jayalalitha’s step mother son : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களில் 50 சதம் தரக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

former-tn-cm-jayalalithaas-step-mothers-son-filed-petition-in-chennai-high-court

சென்னை: Former TN CM Jayalalitha’s step mother son filed Petition : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களில் 50 சதம் தரக் கோரி அவரது மாற்றாந்தாயின் மகன் வாசுதேவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் டி நரசிப்புரா வட்டம் ஸ்ரீரங்கராஜபுரத்தில் வசிக்கும் என்.ஜே. வாசுதேவன், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மாற்றாந்தாயின் மகனும், ஒன்றுவிட்ட சகோதரர் எனவும் கூறப்படுகிறது. இவர் ஜெயலலிதாவின் வாரிசுகள் தீபா, தீபக் என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும், ஜெயலலிதாவின் சொத்துகளில் 50 சதத்தை தனக்கு தர வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தந்தையின் மூத்த தாரத்தின் மகனான வாசுதேவனுக்கு சொந்தமாக ஒரு சிறிய வீடு உள்ளதாகவும், தான் ஒரு பிபி நோயாளி, மருந்துக்கு கூட தன்னிடம் பணம் இல்லை. மாதம் முதியோர் ஊதியமாக ரூ. 500 பெறுவதாக ஏற்கெனவே ஒரு பேட்டியில் வாசுதேவன் கூறி இருந்தார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு அவரது சொத்துக்கு யார் வாரிசு என்பது தொடர்பான வழக்கு நடைபெற்றது. வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவின் வாரிசுகள் அவரது அண்ணன் ஜெயகுமாரின் மகனான தீபக், மகளான தீபா எனக் கூறி, ஜெயலலிதாவின் சொத்துகளை அவர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் ஒன்றுவிட்ட அண்ணன் எனக் கூறப்படும் வாசுதேவன், ஜெயலலிதாவின் வாரிசுகள் தீபா, தீபக் என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் திருத்தம் செய்ய வேண்டும். ஜெயலலிதாவின் சொத்துகளில் 50 சதத்தை தனக்கு தர வேண்டும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.