Ruby Lodge Fire accident : எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஷோரூமில் தீ விபத்து: 8 பேர் பலி

இதற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்படும் என பிரதமரின் தேசிய நிவாரண நிதி அறிவித்துள்ளது.

தெலுங்கானா: (Ruby Lodge Fire accident) தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஷோரூமில் உள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.

தீ விபத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ரூபி எலக்ட்ரிக் பைக் ஷோரூமில் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட தீவிபத்தால் (fire on Monday night), மேல் தளத்தில் உள்ள லாட்ஜில் அடர்ந்த புகை பரவியது. இந்த விபத்தில் மூவர் சம்பவ இடத்திலும், 4 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். சிகிச்சை பலனின்றி இன்று காலை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்த போது லாட்ஜில் சுமார் 25 சுற்றுலா பயணிகள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் காந்தி, யசோதா, அப்பல்லோ மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் மின்சார பைக்கை சார்ஜ் ஏற்றும் போது இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது (It has been revealed that the accident took place while charging the electric bike). இதனிடையே ஷோரூமில் இருந்த பைக்குகள் தீப்பிடித்து எரிந்ததில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அதே சமயம், மேல் தளத்தில் உள்ள லாட்ஜில் அறைக்குள் கடும் புகை வந்ததாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு விளக்கமளித்தார். லாட்ஜில் உள்ளே வருவதற்கும், வெளியே வருவதற்கும் ஒரே வழி இருந்ததால் தப்ப வழியின்றி இந்த மரணங்கள் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. லாட்ஜில் இருந்தவர்கள் அனைவரும் படிக்கட்டில் இருந்து கீழே இறங்க முடியவில்லை.. ஹைட்ராலிக் கிரேன் உதவியுடன் கட்டிடத்தில் இருந்த 9 பேர் மீட்கப்பட்டனர் என்று அவர் தெரிவித்தார்.

மின்சார ஸ்கூட்டர் ஷோரூமின் மேலாளர் ரஞ்சித் சிங்கைக் கைது (The manager of the showroom, Ranjit Singh, was arrested) செய்த போலீசார், இந்த‌ தீ விபத்து தொடர்பாக 304 ஏ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். ரூபியின் எலக்ட்ரிக் ஸ்கூட்டருடன் லாட்ஜையும் அதிகாரிகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். திங்கள்கிழமை இரவு 9.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. சிலர் தப்பிக்க முடியாததால், நான்காவது மாடியில் இருந்து குழாய்களை பிடித்துக் கொண்டு கீழே இறங்கி உயிரை காப்பாற்றிக் கொண்ட‌னர்.

இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi) வருத்தம் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்படும் என பிரதமரின் தேசிய நிவாரண நிதி அறிவித்துள்ளது.