Dinesh Karthik: 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பையை விளையாடும் தினேஷ் கார்த்திக்: நான்கு வார்த்தைகளில் தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட கார்த்திக்

ICC T20 World Cup 2022 : டி20 சர்வதேச கிரிக்கெட்டில் 2006 இல் இந்தியாவிற்காக விளையாடிய தினேஷ் கார்த்திக், விளையாடிய முதல் டி20 போட்டியிலேயே ஆட்ட நாயகன் ஆனார்.

பெங்களூரு: (Dinesh Karthik Dreams come true) இந்திய அணியின் 37 வயதான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக்கின் கதை கிரிக்கெட் வீரர்களுக்கு சிறந்த உத்வேகமாக உள்ளது. 2004-ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான டி.கே., 18 ஆண்டுகளுக்குப் பிறகு மற்றொரு உலகக் கோப்பை போட்டியில் (ICC T20 World Cup 2022) விளையாடத் தயாராகிவிட்டார்.

37 வயதான தினேஷ் கார்த்திக், அக்டோபர்-நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் கிரிக்கெட்டில் முடியாதது எதுவுமில்லை (Nothing is impossible in cricket) என்பதை நிரூபித்துள்ளார். உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்தது குறித்து தினேஷ் கார்த்திக் சுட்டுரையில் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டு, “கனவுகள் நனவாகும்” என்று எழுதினார்.

2007 ஆம் ஆண்டு ஐசிசி டி 20 ( ICC T20) உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் உறுப்பினராக இருந்தார். எம்எஸ் தோனியின் தலைமையில் இந்தியா உலகக் கோப்பையை வென்றபோது டிகே அணியில் இருந்தார். 2007 டி20 உலகக் கோப்பையில் 4 போட்டிகளில் விளையாடிய தினேஷ் கார்த்திக், 2010 டி20 உலகக் கோப்பையில் 2 போட்டிகளில் விளையாடினார். பின்னர் டி20 உலகக் கோப்பையில் விளையாடிய இந்திய அணியில் இடம் பெறத் தவறிவிட்டார் டிகே. ஆனால் தற்போது மீண்டும் இந்திய அணியில் களமிறங்கிய கார்த்திக், 12 ஆண்டுகளுக்குப் பிறகு (After 12 years) டி20 உலகக் கோப்பையில் விளையாடத் தயாராகிவிட்டார்.

இந்த ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி தில்லி கேப்பிடல்ஸுக்கு எதிரான ஐபிஎல் போட்டிக்குப் பிறகு, 2022 டி20 உலகக் கோப்பையில் ஆடி அணிக்காக பட்டம் வெல்வதே தனது வாழ்க்கையில் மிகப்பெரிய இலக்கு (The biggest goal in his life) என்று தினேஷ் கார்த்திக் கூறினார். ஐந்து மாதங்களுக்குப் பிறகு, டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார்.

2006 இல் இந்தியாவிற்காக விளையாடிய தினேஷ் கார்த்திக் (Dinesh Karthik who played for India), விளையாடிய முதல் டி20 போட்டியிலேயே ஆட்ட நாயகன் ஆனார். 18 ஆண்டு சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் மொத்தம் 50 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக், 139.95 என்ற நல்ல ஸ்ட்ரைக் ரேட்டுடன் 28.19 சராசரியுடன் 592 ரன்கள் எடுத்துள்ளார்.