Bengaluru rain : பெங்களூரில் மழை பாதிப்பு : பிரச்னையை எழுப்பி சட்டப்பேரவையில் அமளியை ஏற்படுத்த காங்கிரஸ் தயாராகி வருகிறது

Congress: சட்டப்பேரவை நடவடிக்கை ஆலோசனைக் குழு கூட்டம் சபாநாயகர் விஸ்வேஷ்வர் ஹெக்டே காகேரி தலைமையில் நடந்தது.

பெங்களூரு: Bengaluru rain: இந்த முறை மாநில தலைநகர் பெங்களூருவில் கனமழை பெய்து வருகிறது. வரலாறு காணாத மழையால் (Due to unprecedented rains) பெங்களூரில் பரவலாக‌ கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பெங்களூரில் மழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த பிரச்னையை எழுப்பி சட்ட‌சபையில் சலசலப்பை ஏற்படுத்த காங்கிரஸ் தயாராகி விட்டதாக கூறப்படுகிறது. இதே விவகாரம் தொடர்பாக நேற்று நடந்த சட்டசபை ஆலோசனைக் குழு கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. மழை சேதம் தொடர்பாக மாநிலங்களவையில் 2 நாட்களுக்கு மாநில அரசை கடுமையாகக் தாக்க‌ காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

சபாநாயகர் விஸ்வேஷ்வர் ஹெக்டே காகேரி (Speaker Visveshwar Hegde Kageri) தலைமையில் சட்டப்பேரவை நடவடிக்கைகள் ஆலோசனைக் குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், பெங்களூரில் மழையினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து சட்டப்பேரவையில் கேள்வி கேட்க அனுமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் விஸ்வேஷ்வர் ஹெக்டே, காகேரி சட்டப் பேரவையில் விதி 69ன் கீழ் மழைக்கால அவசரநிலை குறித்து இரண்டு நாட்களுக்கு விவாதிக்க அனுமதி அளித்துள்ளார்.

மழைக் காலங்களில் வட கர்நாடகாவின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்படுவது வழக்கம். ஏராளமான அணைகள் இருப்பதால், வட கர்நாடக மக்கள் அடிக்கடி வெள்ளப் பெருக்கின் பாதிப்பை அனுபவிக்கின்றனர் (The people of North Karnataka are frequently affected by floods). ஆனால் இந்த முறை, மாநிலத் தலைநகர் பெங்களூரில் வசிக்கும் மக்களும் மழை வெள்ளம் என்றால் ஏற்படும் பாதிப்பு என்ன வென்று உணர்ந்துள்ளனர். அண்மையில் சிலிக்கான் சிட்டி என்று பெயர் எடுத்துள்ள பெங்களூரில் பெய்த கனமழையால் மகாதேவப்புரா, பொம்மனஹள்ளி பகுதிகளில் பல பகுதிகள் சேதமடைந்தன. மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. தீயணைப்புப் படையினரும், தேசிய பேரிடர் மீட்பு படையினர் என்.டி.ஆர்.எஃப் படையினரும் (NTRF) படகுகளைப் பயன்படுத்தி மீட்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.

பெங்களூரில் வெள்ளபாதிப்புகளை பார்வையிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா (Leader of Opposition Siddaramaiah), இது தொடர்பாக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்புவோம் என்று தெரிவித்தார். எதிர்க்கட்சிகளின் கேள்விக்களுக்கு உரிய பதில் அளிக்க முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான மாநில அமைச்சர்களும் தயாராகவே உள்ளனர். அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், மழை வெள்ள பாதிப்பை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பாஜக, காங்கிரஸ், மஜத உள்ளிட்ட முடிவு செய்துள்ளன.