Tasmac shops will be closed : தர்மபுரி மாவட்டத்தில் வரும் 15ம் தேதி மதுக்கடைகள் மூடல்

தர்மபுரி : Tasmac shops will be closed on the 15th in Dharmapuri district: தர்மபுரி மாவட்டத்தில் வரும் 15ம் தேதி மதுக்கடைகள் மூடப்படும் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகள் 2003 -12 விதியின் படி, 15.08.2022 சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகள் மூடி விற்பனை இல்லா தினமாக (DRY DAY) கடைபிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசின் உத்தரவின் படி, எதிர்வரும் 15.08.2022 சுதந்திர தினத்தை முன்னிட்டு விற்பனை இல்லா தினமாக (DRY DAY) கடைப்பிடிக்கப்படுவதால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் (TASMAC) மற்றும் மதுக்கூடங்களுக்கான உரிமம் பெற்றுள்ள அரசு மற்றும் தனியார் ஓட்டல்கள் (FL-3, FL-3A, FL-4A) அனைத்தும் 15.08.2022 சுதந்திர தினத்தை முன்னிட்டு அன்றைய தினங்களில் மூடப்படும் என்றும், இந்த உத்தரவினை மீறி மது விற்பனையில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தற்போது வாட்ஸ் ஆப், இணையதளம். குறுஞ்செய்தி மற்றும் இதர மின்னணு வகைகள் மூலம் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பணி வழங்கப்படுவதாகவும், இதற்கு முன்பணம் செலுத்தி பயிற்சி வழங்கி நிரந்தரப் பணி வழங்கப்படும் என போலியாக விளம்பரங்கள் வெளியாகி வருகின்றன. கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் ஆகியவற்றில் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் மூலம் மட்டுமே பத்திரிக்கைகளில் விளம்பரம் வெளியிடப்பட்டு, உரிய முறையில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டு தகுதியின் அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இணையதளம் மற்றும் வாட் ஆப் செயலி ஆகியவற்றின் மூலம் வெளியாகும் போலியான செய்திகளை நம்பி ஏமாறாமல் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தருமபுரி மவட்டம் மற்றும் வட்டம், குமாரசாமிபேட்டை , செங்குந்தர் திருமண மண்டப வளாகத்தில் உள்ள, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலக அரசு வாகன எண்.TN 29 60515 (Tala speeth) “ப்பு முதிரா நிலையில் கழிவு செய்யப்பட்டுள்ளது. கழிவு செய்யப்பட்ட வாகனம் எதிர்வரும் 2008.2022 அன்று பிற்பகல் 3.00 மணியளவில் மேற்படி, உதவி ஆணையர் அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படவுள்ளது. எனவே, மேற்படி பொது புலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் ஏலத்தில் கலந்து கொண்டு விலைப்புள்ளியை கோரலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.