BJP wants to close Tasmac shops in TN : தமிழகத்தில் மதுபானத்திற்கு அடிமையாவதை தடுக்க டாஸ்மாக் கடைகளை மூட பாஜக வலியுறுத்தல்

சென்னை: BJP wants to close Tasmac shops to prevent alcohol addiction in Tamil Nadu : தமிழகத்தில் மதுபானத்திற்கு அடிமையாவதை தடுக்க டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக கே.அண்ணாமலை (K. Annamalai) வெளியிட்டுள்ள அறிக்கை: போதைப் பொருள்கள் என்பது முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும். காரணம் சமூகத்தில் நடைபெறும் குற்றங்களை தடுக்க வேண்டும் என்பதுதான். ஒருவர் போதைப்யை பயன்படுத்தி சாலையில் விழுந்து கிடப்பதால் மற்றவர்கள் என்ன பிரச்னை சென்று கேட்கக்கூடாது. போதைப் பொருள்களால் தான் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடைபெறுகின்றன என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் பேசியுள்ளார். இது போன்ற விழிப்புணர்வுடனான விளக்கத்தைதான் தமிழக முதல்வரிடம் இருந்து எதிர்பார்த்தேன். போதைப் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் தொடர்பாக முதல்வர் அறிந்து வைத்துள்ளார். இதனை நினைக்கும் போது பெருமையாக உள்ளது. ஆனால் போதைப் பழக்கத்தின் தீமைகளை பற்றி தெளிவாக அறிந்துள்ள முதல்வருக்கு, அதிக அளவில் போதையை தருவது மதுபானம்தான் என்பது குறித்து தெளிவு இல்லாமல் இருப்பது வருத்தத்தை தருகிறது.

ததமிழகத்தில் போதைக்கு அடிமையான‌வர்களின் எண்ணிக்கையை எடுத்துக் கொண்டால் மதுபானத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கைதான் அதிகம் (More number of people addicted to alcohol) உள்ளது. தமிழகத்தில் மாணவர்களும் சாதாரணமாக மதுவை வாங்கி அருந்தும் நிலைமையை சமூக ஊடகங்களில் காண முடிகிறது. வருங்கால சந்ததியினரை பாழாக்கி, குடியை கெடுக்கும் மதுபானம் ஒரு போதைப்பழக்கம் என்பதனை தமிழகத்தில் முதல் அமைச்சர் உணராதது போல நடந்து கொள்கிறார். குடும்பத் தலைவிகளுக்கான, பெண்களுக்கான, நலத்திட்டங்களைத்தான் நிறைவேற்ற மனமில்லாமல் முதல்வர் உள்ளார். குறைந்தபட்சம் டாஸ்மாக் கடைகளை மூடுங்கள், குடும்பங்களை, பெண்களை நிம்மதியாக வாழ வைக்கும் வகையில் மதுபானக் கடைகளை மூடும் முடிவை உடனடியாக எடுக்கும்படி முதல்வரை, தமிழக பாஜக சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும் வேண்டுகோள் விடுகிறேன், போதைகள் இல்லாத மாநிலமாக தமிழகம் விளங்கினால் மட்டுமே, வளர்ச்சியடைய முடியும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தமிழகத்தில் போதைப் பொருள்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் அனைவரையும் கைது செய்து, அவர்களது மொத்த சொத்துகளை முடக்கப் படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் (Chief Minister M. K. Stalin) தெரிவித்துள்ளார். போதைப்பொருள்களுக்கு அடிமையாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இது தொடர்பாக போதிய கவனம் செலுத்தாமல் விட்டதன் காரணமாக இந்த சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்த பிரச்னை வரும் காலங்களில் பெரும் பிரச்னையாக மாறிவிடக்கூடாது. போதைப் பொருள்கள் மாநிலத்தில் நுழைவதை தடுக்க வேண்டும். போதை பழக்கத்திற்கு இளைஞர்கள் ஆளாகிவிடாமல் முனைப்புடன் இளைஞர் சமுதாயத்தை பாதுகாத்திடம் வேண்டும் . இதற்காக இளைஞர்கள் மட்டுமின்றி அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.