சென்னை: ஆளுநர் ஆர்.என். ரவி சட்டசபையில் உரையாற்றிய (Governor RN Ravi Will Go To Delhi) போது அவர் சில வார்த்தைகளை தவிர்த்துவிட்டு படித்தது சர்ச்சையாக வெடித்தது. அப்போது தி.மு.க. கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் ஆளுநருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தமிழக அரசு விளக்கம் ஒன்றையும் அளித்திருந்தது.
அதன் பின்னர் சட்டப்பேரவையில் ஆளுநர் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றினர். இது ஆளுநருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆளுநர் உரைக்கு அழைத்துவிட்டு இப்படி அவமானப்படுத்தலாமா என்ற குற்றச்சாட்டையும் பா.ஜ.க. சார்பில் வைக்கப்பட்டது.
இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்கு பின்னர் ஆளுநர் டெல்லி செல்வார் என்று ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. டெல்லியில் அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.