Tamilnadu Comming 5 Days Rain: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்து வருகின்ற 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (டிசம்பர் 14) வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

மேலும், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நாளை மறுநாள் (டிசம்பர் 15) முதல் டிசம்பர் 18 வரை ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் அல்லது லேசான முதல் மிதமான மழையும் பெய்யும்.

அதே நேரம் சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் தென்படும். நகரில் ஒரு சில பகுதிகளில் லேசான மழையும் பெய்யலாம். அதிகபட்சமாக வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்த அளவிலான வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவாக இருக்கலாம்.

மேலும், மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியிருக்கும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று, நாளையும் சூறாவாளி காற்று வீசும். எனவே அப்பகுதிக்கு மீனவர்கள் குறிப்பிட்ட நாட்கள் மட்டும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார். இவ்வாறு அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு குறிப்பிட்ட மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டது.