சென்னை: Tamil Nadu, Puducherry recorded high rainfall in August : கடந்த 122 ஆண்டுகளில் தென்மேற்கு பருவ மழைக் காலத்தில் 3 ஆவது முறையாக ஆகஸ்ட் மாதத்தில் அதிகமான மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது : தென்மேற்கு பருவமழை தமிழகம் , புதுச்சேரியில் (South West Monsoon Tamil Nadu, Puducherry) தீவிரமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மழை பதிவாகியுள்ளது . எட்டு இடங்களில் கனமழையும் சில இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளது . அந்த வகையில் நாகபட்டினம் மாவட்டம் திருக்குவளையில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது . திருநெல்வேலி, நாமக்கல், தருமபுரி, ஈரோடு, திருப்பூர், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட 18 பாவட் டங்களில் தென் மேற்கு பருவ மழைக்காலத்தில் 100 சதவீதத்திற்கும் அதிகமாக மழை அளவு பதிவாகி உள்ளது .
கடந்த 122 ஆண் டுகளில் தென்மேற்கு பருவ மழை காலத்தில் மூன்றாவது முறையாக ஆகஸ்ட் மாதத்தில் அதிக அளவில் மழை பதிவாகியுள்ளது (For the third time, August has recorded the highest rainfall). குறிப்பாக, 1906 ஆம் ஆண்டில் 112 செமீட்டரும் , 1909 ஆம் ஆண்டில் 127 செ.மீட்டரும் . 2022 – ஆம் ஆண்டில் 93 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை தமிழகம், புதுச்சேரியில் 40 செ.மீ. மழை பதிவாகியுள்ளது . இந்த காலத்தில் இயல்பான மழை அளவு 21 செ.மீ. ஆகும் . இது இயல்பான அளவைவிட 88 சதம் அதிகமாகும்.
வட தமிழக கடலோரப் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டிய மாவட்டங்கள் , மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை முதல் மிக பலத்தமழை (Heavy to very heavy rain) பெய்யக்கூடும். கள்ளக்குறிச்சி, தரும்புரி உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.



